மாமாக்குட்டி.. நான் ஃபிரெண்டாதாங்க பழகுனேன்.. பட்டுன்னு சொன்ன "பெஸ்டி.." கோர்ட்டுக்கு ஓடிய வாலிபன்
சிங்கப்பூரில் காதலை ஏற்க மறுத்த பெண்ணிடம் ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் பெண்ணின் நண்பர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாஷிங்டன்: காதலை ஏற்க மறுத்து தனது உணர்வுகளுடன் விளையாடியதாக கூறி தனது நீண்ட நாள் தோழிக்கு எதிராக நீதிமன்றத்தில் ரூ.24 கோடி நஷ்ட ஈட்டு கேட்டு அவரது ஆண் நண்பர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சிங்கப்பூரில் இந்த சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
நீண்ட நாள் தோழி தன்னுடைய காதலை ஏற்க மறுப்பதாகவும் தனது உணர்வுகளுடன் விளையாடிய அந்தப் பெண் ரூ.24 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
என்னங்க சொல்லுறீங்க.. இதுக்கெல்லாம் இழப்பீடு கேட்டு வழக்கா... நீங்க கேட்பது புரிகிறது. இந்த சுவாரசிய நிகழ்வு சிங்கப்பூரில் தான் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

நண்பர் என்ற முறையிலேயே
சிங்கப்பூரை சேர்ந்த காவ்ஷிகன் என்பவருக்கு நேரா டான் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். நாளடைவில் காவ்ஷிகனுக்கும் நேரா டானும் நெருங்கிய நண்பர்களாகவும் ஆகினர். காவ்ஷிகனுக்கு நேரா டான் மீது காதல் வந்துள்ளது. ஆனால் டான் எப்போதும் ஒரு நண்பர் என்ற முறையிலேயே பழகியிருக்கிறார். 4 வருடங்களாக இவர்களது நட்பு மிகவும் நெருக்கமாக கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவர்களது நட்புறவுக்குள் பூகம்பம் வெடித்து இருக்கிறது.

வெறும் நண்பராக மட்டும் தான் பழகினேன்
காவ்ஷிகன் தனது காதல் விருப்பதை நேரா டானிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால், நேரா டானோ 'அய்யய்யோ' நான் அப்படி எல்லாம் நினைக்கலங்க... வெறும் நண்பராக மட்டும் தான் உங்களிடம் பழகினேன் என்று சொல்லியிருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த காவ்ஷிகன் 4 வருடம் எனது உணர்வுளுடன் விளையாடி விட்டு இப்படி சொல்லுறீங்களே என்று கூறி உங்களுக்கு எதிராக வழக்கு தொடர போகிறேன் என்று நேரா டானிடம் கூறியிருக்கிறார்

காவ்ஷிகன் அதிருப்தி
இருந்தாலும், மருத்துவரிடம் கவுன்சிலிங் வருவதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் நேரா டான். இதனால் வழக்கு தொடரும் தனது முடிவை ஒத்திவைத்த காவ்ஷிங் மருத்துவ கவுன்சிலிங் சென்று இருக்கிறார். இந்த கவுன்சிலிங்கின் போது காதலை ஏற்பதில் தனக்கு உடன்பாடு இல்லை. அதில் அசவுகரியமாக இருப்பதாக தனது எண்ணத்தை நேரா டான் வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால், காவ்ஷிகன் அதிருப்தி அடைந்து இருக்கிறார்.

ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ கவுன்சிலிங்
மேலும், எனது விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விட்டதற்காக உரிய இழப்பீடை கொடுக்க வேண்டும் என்று காவ்ஷிகன் சொல்லியிருக்கிறார். ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்ற போதும் இருவருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. நோரா டான் தனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காவ்ஷினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சினைக்கு பிறகு நோரா டான் காவ்ஷிகனுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்தார்.

ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
இதனால் மனம் வெதும்பி போன காவ்ஷிகன், சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் 3 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு நோரா டானுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் மன அழுத்தம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதேபோல், தன்னுடனான உறவை மேம்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை மீறிவிட்டதாக கூறி மற்றொரு வழக்கையும் தொடுத்துள்ளார் காவ்ஷிகன். 3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 24 கோடி) கேட்டு தொடரப்பட்ட வழக்கை வரும் 9 ஆம் தேதிக்கு விசாரிப்பதாக (pre-trial) தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications