பரிசாக அடித்த 33 கோடி ரூபாய்.. ஆசையில் துள்ளி குதித்த நபர்.. அடுத்த நொடியே நடந்த சோகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சிங்கப்பூரில் கேசினோவில் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. பரிசு தனக்கு கிடைத்துள்ளது என்ற செய்தியை அறிந்ததும் ஆசையில் துள்ளி குதித்த அந்த நபர் அடுத்த நொடியே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ரூ.33 கோடி பரிசாக கிடைத்தும் அந்த பணத்தை பயன்படுத்த முடியாமல் நெஞ்சுவலியில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் அது லாட்டரியால் மட்டுமே சாத்தியம். லாட்டரியால் ஒரு சிலர் மட்டுமே கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்றாலும், நம் கண்ணுக்கு தெரியாமல் லாட்டரியால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு சென்றதாகவும் செய்திகளை கேள்விப்பட்டு இருப்போம்.

lottery heart attack weird

இதை ஒரு காரணமாக கொண்டே தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பக்கத்து மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. என்னதான் ஆயிரம் பேர் கூறினாலும் யாரோ ஒருவருக்கு அடிக்கும் பரிசை எண்ணி பலரும் நமக்கும் என்றாவது லாட்டரி அடிக்கும் என்ற ஆசையோடு வாங்குகின்றனர். இதில் ஒரு சிலருக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறக்கும்.

அப்படி அதிஷ்ட தேவதை கண் திறந்து பல கோடிகளுக்கு சொந்தமாகும் போது எல்லையில்லா மகிழ்ச்சியடைவர். நாம் பல நாள் கண்ட கனவுகளை எல்லாம் நிறைவேற்றிவிடலாம் என்று ஆசைப்படுவர். அதே சமயத்தில் எப்படி அதிர்ஷ்டம் கண் திறக்கிறதோ அதேபோல் ஒரு சிலருக்கு துரதிருஷ்டமும் கூடேவே இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக தான் சிங்கப்பூரில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.

அதாவது கேசினோவில் ரூ.33 கோடி ரூபாய் பரிசு கிடைத்தும் அந்த பணத்தை கையில் தொட்டு கூட பார்க்க முடியாமல் அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேசினோவில் 33 கோடி ரூபாய் அடித்திருப்பதாக தெரிந்ததும் ஆசையில் துள்ளி குதித்துள்ளார். அப்போது எல்லையில்லா மகிழ்ச்சியில் துரதிருஷ்டவசமாக அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பே சாண்ட்ஸ் கேசினோவில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கேசினோவில் 4 மில்லியன் பரிசாக கிடைத்துள்ளது என்று சொன்னவுடன் அந்த நபர் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளார். அப்போது ஒரு நிமிடத்தில் மார்பில் கையை வைத்து அப்படியே நின்ற இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+