முதல் மாதம் இலவசம்! 2 மாதங்களில் இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை! மாத கட்டணமும் இவ்வளவுதானா?
வாஷிங்டன்: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் அடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் தனது சேவையை தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்டார்லிங் சேவையை பெற விரும்பும் பயனர்கள் முதலில் அதன் டிவைஸை ரூ. 33 ஆயிரம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கும் எனவும் மாதம் தோறும் ரூ.3 ஆயிரத்திற்கு அன்லிமிடெட்டு இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்' நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது. செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை கிடைக்கும் என்பதால் இந்த இணைய செவை நகரம், கிராமம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும்.

2 மாதங்களில் சேவை
இது கிராமப்புற பகுதிகளுக்கும் பெரிதும் பயனாக இருக்கும் என்பதால் ஸ்டார்லிங் இணைய சேவைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இந்தியாவில் தனது சேவையை தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. சமீபத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இணையச் சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது சேவையை அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளது.
எவ்வளவு கட்டணம்?
இதற்கான செயல்பாட்டு உரிமத்தை அந்நிறுவனம் கடந்த வாரம் பெற்றது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்திய சந்தைக்கான கட்டண கட்டமைப்பை ஸ்டார்லிங்க் நிறுவனம் இறுதி செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெறுவதற்கு தேவையான செயற்கைக்கோள் டிஷ்ஷை வாடிக்கையாளர்கள் ரூ.33,000க்கு வாங்க வேண்டும். மேலும், மாதாந்திர வரம்பற்ற டேட்டா திட்டத்தின் விலை ரூ.3,000 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத இலவச சேவை
ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது அறிமுக திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு டிஷ் வாங்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு மாத இலவச டிரெயில் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம், சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தி சேவையை தொடர்வதற்கு முன், அதன் அனுபவத்தை பெற முடியும். குறிப்பாக, செயற்கைக்கோள் இணையம் புதிய கருத்தாக இருக்கும் பகுதிகளில், புதிய பயனர்களுக்கு எளிதான அணுகலை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இது உலகளாவிய மாதிரிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க்
இந்தியாவில் ஸ்டார்லிங்க் அறிமுகம், டிஜிட்டல் இணைப்புச் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஃபைபர் ஆப்டிக் அல்லது மொபைல் அடிப்படையிலான இணைய சேவைகள் கிடைக்காத கிராமப்புற மற்றும் புவியியல் ரீதியாக சவாலான பகுதிகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, இதுவரை இணைய வசதி கிடைக்காத பகுதிகளுக்கு வேகமான மற்றும் நிலையான இணைய அணுகலை ஸ்டார்லிங்க் வழங்குகிறது. இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண மாதிரியானது, அண்டை நாடுகளிலும் இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்றி உள்ளது.
இதேபோன்ற செயற்கைக்கோள் டிஷ் உபகரணங்கள் வங்கதேசம் மற்றும் பூட்டானில் ரூ.33,000க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம், அந்நிறுவனம் பிராந்திய அளவில் ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைபிடிப்பதை காட்டுகிறது. தற்போது, ஸ்டார்லிங்க் 25 முதல் 220 Mbps வரை வேகத்தில் அதிவேக இணையத்தை வழங்கி வருகிறது.
இணைய வசதி மேம்படும்
பெரும்பாலான பயனர்கள் 100 Mbps வேகம் கிடைப்பதாக கூறுகிறார்கள். இந்த இணைய இணைப்பு ஃபைபர் அல்லது மொபைல் நெட்வொர்க்குகளைச் சார்ந்து இல்லாமல் கிடைக்கிறது. குறைந்த புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள் (LEO) மூலம் இந்த செயற்கைக்கோள் இணைப்பு வழங்கப்படுகிறது.
ஸ்டார்லிங்க் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையைத் தொடங்க தயாராகி வருவதன் மூலம், நாட்டின் தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் இணைய வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications