"ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும்.." அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு
வாஷிங்டன்: ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று அமெரிக்காவில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதுமட்டும் இன்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து அளித்து கவுரவித்தனர். இதே போன்று அமெரிக்க அரசின் சார்பில், பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார். அந்த வகையில், இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்காவில் எனக்கு கிடைத்த அன்பு அருமையாக உள்ளது. இந்த பெருமை உங்களையே சேரும். ஜோ பைடனும் நானும் பல்வேறு விஷயங்கள் குறித்து கடந்த 3 தினங்களாக பேசினோம். ஜோ பைடன் அனுபவம் வாய்ந்த அரசியல் வாதி என என்னால் சொல்ல முடியும்.
இந்தியா - அமெரிக்கா உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அவர் எப்போதுமே முயற்சிக்கிறார். இந்தியாவின் மிகப்பெரும் வளர்ச்சிக்கு நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் நம்பிக்கையே காரணம். மோடி தனியாக எதையும் செய்யவில்லை. 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காலனித்துவம் நம்மிடம் இருந்து பறித்த நம்பிக்கையை புதிய இந்தியா மீட்டுள்ளது.
இந்தியா தனது பாதை மற்றும் திசையை சரியாக அறிந்திருக்கிறது, இந்தியாவின் முடிவுகளில் குழப்பம் இல்லை. இந்தியா உள்கட்டமைப்புகளுக்காக இதற்கு முன்பாக இவ்வளவு முதலீடுகள் செய்தது இல்லை. இந்தியா ஜனநாயகத்தின் தாய். அமெரிக்கா நவீன ஜனநாயகத்தின் சாம்பியன். இந்தியாவில் இருந்து திருடி கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா கூட்டுறவு 21 ஆம் நூற்றாண்டை உலகமை இன்னும் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வதாகும். அமெரிக்காவில் இருந்து முதலீடுகள் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை மேலும் மேம்படுத்தும். இந்தியாவில் முடிந்த அளவு முதலீடுகளை செய்ய இதுதான் சிறந்த தருணம் ஆகும். இந்தியாவில் உள்ள கூகுள் ஏஐ- யின் ஆய்வு மையம் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படும். ஹூஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்திய அரசு உதவியுடன் தமிழ் இருக்கை நிறுவப்படும்" என்றார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications