அமெரிக்க அதிபர் தேர்தல்... வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்... இந்த 10 மாகாணங்கள்...!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக 10 மாகாணங்கள் திகழ்வதால் அங்கு அனல் பறக்கும் பரப்புரைகள் நடைபெற்று வருகின்றன.
ஒட்டுமொத்த உலக நாடுகளையும் தன் பக்கம் ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 5 நாட்களில் நடைபெறவுள்ளது. மீண்டும் அதிபர் பதவியை தக்க வைப்பதற்காக ட்ரம்ப் ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொண்டு வருகிறார்.

ட்ரம்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வெள்ளை மாளிகைக்குள் அதிபராக நுழைய ஜோ பிடன் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். செல்லும் இடங்களிலெல்லாம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 15-ல் இருந்து 20 மாகாணங்கள் வரை ட்ரம்பின் குடியரசுக் கட்சி வலிமையாக திகழ்கிறது. மாசசூசெட்ஸ், அலாஸ்கா, அலபாமா, மின்னசோட்டா, வடக்கு டகோடா, ஓக்லஹோமா, தெற்கு கரோலினா, உள்ளிட்ட 20 மாகாணங்களில் குடியரசுக் கட்சியின் கொடி பறப்பதால் அங்கு குடியரசுக் கட்சி சார்பில் பிரச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
குடியரசுக் கட்சியை போல் ஜோ பிடன் போட்டியிடும் ஜனநாயக கட்சிக்கும் 20 மாகாணங்களில் வலிமையான கட்டமைப்புகள் உள்ளன. டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், இந்தியானா, கன்ஸாஸ், கெண்டக்கி, லூசியானா, நியூயார்க், என 20 மாகாணங்கள் வரை ஜனநாயக கட்சியின் கோட்டையாக திகழ்வதால் அங்கு ஜோ பிடனுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஆனால் Swing states எனப்படும் ஊசலாட்டமான மாகாணங்கள் பட்டியலில் உள்ள அரிஜோனா, கொலரடோ, மிச்சிகன், பென்சில்வேனியா, ஓஹியோ, விஸ்கான்சின், போன்ற 10 மாகாணங்களில் கிடைக்கப் போகும் வாக்கு சதவீதங்களை கொண்டே அமெரிக்காவின் அடுத்த அத்தியாயம் தொடங்கவிருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை நடைபெறவேண்டும் என்ற மரபை போல் புதிய அதிபர் பதவியேற்பு விழாவும் ஜனவரி 20-ம் தேதி தான் நடைபெறவேண்டும் என்ற மரபு அமெரிக்காவில் பின்பற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications