ரெஸ்டாரண்ட் செல்லும் போதெல்லாம் இப்படித்தான்.. பர்சை மறந்த காதலனுக்கு பிரேக்-அப் சொன்ன காதலி
வாஷிங்டன்: ரெஸ்டாரண்ட் செல்லும் போதெல்லாம் பர்ஸ் மற்றும் கிரெடிட் கார்டை மறந்துவிட்டு வந்த காதலனை காதலி பிரேக் அப் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
காதலில் பிரிவது ஏற்படுவது சகஜம்தான்... உருகி உருகி காதலித்தாலும் குடும்ப சூழல், திடீரென ஏற்படும் கருத்து வேறுபாடு என எத்தனையோ காரணங்களால் காதல் முறிவு ஏற்படுவது வாடிக்கைதான்..
இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. வழக்கமாக காதலில் பிரேக் அப் ஆகிவிட்டது என்று நண்பர்களிடம் கலாய்த்தால், உன் பர்ஸ் தப்பித்ததடா? என ஜாலியாக நண்பர்கள் கலாய்ப்பது உண்டு..

வரும் போதெல்லாம் பர்சை மறந்துவிட்டு..
ஆனால், காதலன் வெளியில் வரும் போதெல்லாம் பர்சை மறந்துவிட்டு வருகிறான் என்ற காரணத்திற்காக காதலை பிரேக் அப் செய்து விட்டதாக பெண் ஒருவர் ரெட்டிட் சமூக வலைதளத்தில் தெரிவித்து இருப்பது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. இது குறித்து ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் அந்தபெண் கூறியிருப்பதாவது:- எனது பாய்ஃபிரண்டிற்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர்.

பில் செலுத்தும் போது
அவர் மீது நான் காதல் வயப்பட்டதில் இருந்தே எப்போதும் 4 பேராகத்தான் வெளியில் செல்வோம். பல இடங்களையும் வெளியில் நன்றாக சுற்றிவிட்டு பின்னர் இறுதியாக ரெஸ்டாரண்ட் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு வருவோம். துவக்கத்தில் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தும் போது எனது பாய் ஃபிரண்ட் பர்சை மறந்துவிட்டதாக கூறினார். நானும் தவறுதலாக மறந்துவிட்டார் எனக்கருதி சாப்பிட்டதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு வருவேன்.

பர்சை மறந்துவிடுகிறார்
ஆனால், நாட்கள் செல்ல செல்ல இதே பழக்கத்தை அவர் தொடர்ந்து வருவதை கவனித்தேன். எப்போது எல்லாம் ரெஸ்டாரண்ட் செல்கிறோமோ அப்போதெல்லாம் அவர் பர்சை மறந்துவிடுகிறார். சரி மறக்கத்தானே செய்கிறார் என்று நினைத்துவிட்டு, அடுத்த முறை வெளியில் போகும் முன்பாக அவருக்கு போன் செய்து நினைவு படுத்தினேன். பர்சை மறக்காமல் எடுத்துவந்து விடுங்கள் என்று நான் சொன்னதும் வேகமாக தலையை ஆட்டிவிட்டு அவரும் வந்தார்.

ஃபேண்ட் மாறிவிட்டது
ஆனால், எல்லாம் சாப்பிட்டு விட்டு பில் செலுத்தும் போது நான் கிரெடிட் கார்டு வைத்திருந்த ஃபேண்ட் மாறிவிட்டது என்று கூறி அதிர்ச்சி அளித்தார். என்னை மன்னித்துவிடு என்றார். ஆனாலும் என்னால் இதை ஏற்க முடியவில்லை. உடனே கோபத்தில் எழுந்து நான் இன்று உணவுக்கான கட்டணத்தை செலுத்த போவது இல்லை என்று வேகமாக அங்கிருந்து சென்று விட்டேன்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
பிறகு அன்று இரவு போன் செய்த பாய்ஃபிரண்ட், ரெஸ்டாரண்ட்டில் இருந்து ஏன் கிளம்பிவிட்டாய் என்று கோபமாக கேட்டார். அதற்கு கோபமாக நானும் பதிலளித்துவிட்டேன்'' என்றார். ஆனால், தன்னைப்பற்றிய எந்த விவரத்தையும் அந்தப் பெண் வெளியிட மறுத்துவிட்டார். எனினும், இவரது இந்த பதிவை வைத்து, இதெற்கால்லாம் பிரேக் அப் செய்வதா?.. என கலாய்த்தும் வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications