Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானை அவமானப்படுத்திய டிரம்ப்.. ‛சைலன்ட்’டாக வேலையை காட்டிய அமெரிக்கா.. போச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று மேடைக்கு மேடைபாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூவி வருகிறார். இந்நிலையில் தான் அமெரிக்கா பாகிஸ்தானை அவமானப்படுத்தி உள்ளது. தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ததை மறந்து பாகிஸ்தானை குறிவைத்து டொனால்ட் டிரம்ப் சம்பவம் ஒன்றை செய்துள்ளார். அதுபற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்தபோது, பாகிஸ்தானுடனான உறவு சிறப்பாக இல்லை. ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்டுள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் கடந்த மே மாதம் போர் நடந்தது.

இந்த போரை பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் நம் நாடு நிறுத்தியது. இதில் வேறு நாடுகளின் தலையீடு இல்லை என்று மத்திய அரசு கூறியது.

pakistan us donald trump

டிரம்புக்கு ஆதரவாக பாக்., பிரதமர்

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான் தான் என்று கூறி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திய டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெட்கமே இல்லாமல் முழங்கி வருகிறார்.

பாகிஸ்தானை அவமானப்படுத்திய டிரம்ப்

அதேபோல் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரையும் அமெரிக்கா அழைத்து டொனால்ட் டிரம்ப் லஞ்ச் விருந்து வழங்கினார். இப்படி அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவு வலுப்பட்டு வரும் நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை அவமானப்படுத்தி உள்ளார். அதாவது அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டம் வைத்திருந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செல்ல வேண்டும் என்று அமெரிக்க வெளியறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா அறிக்கை

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛பாகிஸ்தானில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல் உள்நாட்டில் அமைதியன்மை நிலவுகிறது. பயங்கரவாதம், ஆள்கடத்தல் சம்பவம் நடக்கிறது. இதனால் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ள அமெரிக்க மக்கள் ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் அச்சம்

அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாடுகளையும் அமெரிக்கா தனித்தனியாக வகைப்படுத்தி உள்ளது. இதில் மொத்தம் 4 வகைகள் உள்ளன. அதன்படி பாகிஸ்தானை ‛லெவல் 3' பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. 3வது ஸ்டேஜில் உள்ள நாடுகள் என்றால் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடக்கலாம்.

ஹோட்டல்கள், சந்தைகள், ஷாப்பிங் மால்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் பகுதிகள், விமான நிலையங்கள், ரயில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அம்சங்கள் உள்ளன.

நிலை 4ல் கைபர் பக்துன்க்வா

மேலும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை மிக ஆபத்தான 'நிலை 4' பிரிவில் அமெரிக்கா சேர்த்துள்ளது. அந்தப் பகுதிகளுக்கு எந்தக் காரணத்திற்காகவும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க மக்களிடம் அந்த அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து நடக்கும் கொலை மற்றும் ஆட்கடத்தல் முயற்சிகள் அங்கு சாதாரணமாகிவிட்டதாக இந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பயண அறிவுரை பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கக் குடிமக்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அனுமதி இல்லாமல் போராட்டங்களில் கலந்துகொள்வது சட்ட விரோதமானதாக உள்ளது. அவ்வாறு செய்த பல அமெரிக்கக் குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசு, ராணுவம் அல்லது அதிகாரிகளை விமர்சிக்கும் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்களும் கைது செய்யப்படலாம். இதனால் பாகிஸ்தான் செல்லும் முன்பு யோசித்து கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

கேவலப்படுத்திய டிரம்ப்

அந்த வகையில் பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேவலப்படுத்தி உள்ளார். இது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு இப்படியான அறிவுரையை வழங்கி இருப்பது பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பயங்கவரவாத தாக்குதல்கள் எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இதன்மூலம் பாகிஸ்தானை, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கேவலப்படுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+