Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சோழர் கால 3 சிலைகள்.. திருப்பி அளிக்க அமெரிக்கா முடிவு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தமிழக கோ​யில்​களில் இருந்து கடத்​தப்​பட்ட சோழர் காலத்து 3 வெண்கல சிலைகள் இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க அமெரிக்க அருங்​காட்​சி​யகம் ஒப்​புக் கொண்​டுள்​ளது. அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகத்தில் இந்த சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

வாஷிங்டனில் அமைந்துள்ள ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம், 1950களில் தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மூன்று பழமையான வெண்கலச் சிற்பங்களை இந்தியாவுக்கு திருப்பி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Three stolen TN temple bronzes to be returned by US museum

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால 'நடராஜர்', பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால 'சோமாஸ்கந்தர்', மற்றும் 16 நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரக் கால 'சுந்தரர் மற்றும் பரவை' ஆகியவை இந்தச் சிலைகள் ஆகும். இவை ஒருகாலத்தில் கோயில் திருவிழாக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புனிதச் சிலைகளாகும்.

அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்த இந்த சிலைகள் இந்தியாவில் இருந்து திருடி வரபப்ட்டவை என புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், அருங்காட்சியகம் தனது தெற்காசியச் சேகரிப்புகளில் முறையான ஆய்வை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, மூன்று சிற்பங்களின் மூலவரலாறு விரிவாக விசாரிக்கப்பட்டு, சிலைகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்ற வரலாறுகள் ஆராயப்பட்டன. இதில், 2023இல் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தின் புகைப்படக் காப்பகத்துடன் இணைந்து, 1956 மற்றும் 1959ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இவை தமிழ்நாட்டுக் கோயில்களில் படம்பிடிக்கப்பட்டிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியத் தொல்லியல் துறை (ASI) இந்த ஆய்வு முடிவுகளை மறுஆய்வு செய்து, சட்ட விரோதமாக சிலைகள் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியது. இதனையடுத்து, தமிழகத்திற்கு திரும்பி ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

'நடராஜர்' சிலை, தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ஸ்ரீ பவ ஔஷதேசவரர் கோயிலைச் சேர்ந்தது. இது 1957இல் அங்குப் படம்பிடிக்கப்பட்டது. 2002இல் நியூயார்க்கின் டோரிஸ் வீனர் கேலரியில் இருந்து அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டது. 'சோமாஸ்கந்தர்' மற்றும் 'சுந்தரர் மற்றும் பரவை' சிலைகள் 1987இல் ஆர்த்தர் எம். சாக்லர் நன்கொடையாக அளித்த 1,000 பொருட்களின் ஒரு பகுதியாக அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்குள் வந்துள்ளன.

அருங்காட்சியகக் குழுவும் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், 'சோமாஸ்கந்தர்' சிலை 1959இல் மன்னார்குடி தாலுகா ஆலத்தூர் விஸ்வநாதர் கோயிலிலும், 'சுந்தரர் மற்றும் பரவை' சிலை 1956இல் கள்ளக்குறிச்சி தாலுகா வீரசோழபுரம் சிவன் கோயிலிலும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதன்படி மூன்று சிலைகளுமே தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்படது உறுதி செய்யப்பட்டதால், 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க அமெரிக்க அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது. இருந்த போதிலும் இரு நாட்​டின் நட்​புறவு அடிப்​படை​யில், ஷிவா நடராஜர் சிலையை மட்​டும் அருங்​காட்​சி​யகத்​தில் நீண்ட கால அடிப்​படை​யில் தொடர்ந்து காட்​சிப்​படுத்த இந்​தியா அனு​மதி அளித்​துள்​ளது. அந்த சிலையை பற்​றிய முழு விவரங்​களும் அருங்​காட்​சி​யகத்​தில் காட்​சிப்​படுத்​தப்​படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+