மொத்த மானமும் கப்பல் ஏறிடுச்சு.. எப்ஸ்டீனுடன் டைட்டானிக் போஸ் கொடுத்த டிரம்ப்! மர்ம நபர்கள் சம்பவம்!
வாஷிங்டன்: பிரபல பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் டிரம்புக்கு தொடர்பு இருக்கிறது என்று, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், 'சீக்ரெட் ஹேண்டஷேக்' எனும் கலைஞர் குழுவினர், எப்ஸ்டீனுடன், டிரம்ப் டைட்டானிக் போஸ் கொடுப்பதை போன்று சிலையை உருவாக்கி, அதை வாஷிங்டன் நகரத்தின் நடுவில் வைத்திருக்கிறார்கள்.
எப்ஸ்டீன் விவகாரம் குறித்து டிரம்ப் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சமயம் பார்த்து, எப்ஸ்டீனுடன் இருப்பதை போன்று வைக்கப்பட்டிருக்கும் சிலை, மொத்த அமெரிக்காவையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

என்ன நடந்தது?
எப்ஸ்டீன் என்பவர் அமெரிக்காவின் பிரபலமான பைனான்சியர். ஆனால், அவர் பிரபலமாவதற்கு காரணம் அவருடைய பைனான்சியர் வேலை கிடையாது. மாறாக சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியதுதான் உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியது. இப்போது எப்ஸ்டீன் உயிருடன் இல்லை. ஆனால், அமெரிக்காவை பொறுத்தவரை குற்றவாளிகளின் முழு விவரங்களையும் பொது வெளியில் வெளியிட வேண்டும் என்பது சட்டம்.
எப்ஸ்டீனுடன் டிரம்ப்
எனவே எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டது. இதில்தான் டிரம்ப் சிக்கலை சந்தித்தார். அதாவது, இந்த ஆவணங்களில் டிரம்ப் உட்பட ஏராளமான முக்கிய புள்ளிகளின் பெயர்களும் அடிபட்டன. இல்லீங்க, எனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டிரம்ப் மறுத்தாலும், எப்ஸ்டீனுடன் இருக்கும் வீடியோக்கள், டிரம்பின் மறுப்பை சந்தேகத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் டிரம்ப் கலக்கமடைந்திருக்கிறார்.
தப்பிக்க முயற்சிக்கும் டிரம்ப்
இப்படி இருக்கையில், எப்ஸ்டீனுடன் டிரம்ப் கடிப்பிடித்து இருப்பதை போன்ற சிலை ஒன்று வாஷிங்டன் நகரத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கிறது. பலரும் இந்த சிலையை வந்து பார்த்து, அதனுடன் செல்பி எடுத்து செல்கிறார்கள். விஷயத்தை மூடி மறைக்க டிரம்ப் தரப்பு எவ்வளவோ முயற்சி செய்து வருகிறது. ஆனால், மக்கள் இதனை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
விசாரணை வேண்டும்
மற்ற நாடுகளில், குறிப்பாக பிரிட்டனில் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்று தெரிய வந்ததும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பிரிட்டனை பொறுத்தவரை முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இப்படியாக மற்ற நாடுகளில் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், டிரம்ப் மீது விசாரணை கூட நடத்தப்படவில்லை என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications