பதில் சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்! ரஷ்ய எண்ணெய்யை சீனாவும் வாங்குது.. இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்!
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை டிரம்ப் 50%ஆக உயர்த்தியுள்ளார். இந்தியா மட்டுமின்றி சீனா கூட ரஷ்யா எண்ணெய் வாங்கும் நிலையில், இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதித்திருப்பது நியாயமற்றது என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே இது குறித்த கேள்விக்கு டிரம்ப் அளித்துள்ள பதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், டிரம்ப் இப்போது அதை மோசமாக மாற்றி வருகிறார். முதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இது பரபரப்பைக் கிளப்பியது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் நேற்று மீண்டும் கூடுதலாக 25% வரிகளை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப் வரி
இதன் மூலம் இந்தியா மீதான அமெரிக்காவின் ஒட்டுமொத்த வரி 50%ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியா அமெரிக்கா இடையேயான உறவைச் சிக்கலில் தள்ளி இருக்கிறது. இதற்கிடையே இந்தியா மீது இப்படி வரிகளை அவர் விதித்த நிலையில், மேலும் சில நாடுகளின் மீது, குறிப்பாகச் சீனா மீதும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப் இது குறித்துக் கூறுகையில், "இது நடக்கலாம். இப்போதைக்கு என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், இந்தியாவிற்கு எதிராக இதைச் (வரி விதிப்பைச் சொல்கிறார்) செய்தோம். மேலும் சில நாடுகளுக்கும் இதைச் செய்ய இருக்கிறோம்; அவற்றில் ஒன்று சீனாவாக இருக்கலாம்" என்றார்.
இந்தியா மீது மட்டும் வரி ஏன்?
ரஷ்யாவிடம் இருந்து சீனா உட்பட பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில், இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதித்திருப்பது நியாயமற்றது என இந்தியா கூறியது. இதை கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத டிரம்ப் சமாளிக்கும் வகையில், "வரி விதித்து வெறும் 8 மணி நேரமே ஆகிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறித்திருந்து பார்ப்போம். நீங்கள் இன்னும் நிறைய நாடுகள் மீது இதுபோல கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
டிரம்ப் சொல்வது என்ன
முன்னதாக டிரம்ப் புதன்கிழமை இந்தியாவுக்குக் கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். குறிப்பாக, ரஷ்ய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அமெரிக்காவிற்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அப்போது தெரிவித்தார். அமெரிக்கா விதித்துள்ள இந்த கூடுதல் வரி அடுத்த 21 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. ஏற்கனவே, இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பொருட்கள், மற்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களைத் தவிர மற்ற அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிகிறது.
இந்தியா அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை
இந்திய அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அமெரிக்க விவசாய பொருட்களுக்கான இறக்குமதியை வழங்க இந்தியா தயாராகவில்லை. அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் டிரம்ப் இந்த வரியை விதித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இன்று பிரதமர் மோடியும் இதில் தெளிவாகப் பதிலளித்திருந்தார். இந்திய விவசாயிகளின் நலன்களில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் அதற்கு எந்த விலை கொடுக்கவும் இந்தியா ரெடியாக இருப்பதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு!












Click it and Unblock the Notifications