டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை
வாஷிங்டன்: வளைகுடாவில் இப்போது தான் அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா இறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் மிக மோசமான ஒரு தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் மிரட்டியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதலை ஆரம்பித்தது. இந்த போர் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த நிலையில், மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளைகுடா மட்டுமின்றி உலகெங்கும் இந்த பாதிப்புகள் எதிரொலித்தது. இந்தச் சூழலில் தான் நேற்று காலை திடீரென போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் மெல்ல அமைதி திரும்பும் சூழல் ஏற்பட்டது.

டிரம்ப் எச்சரிக்கை
போர் நிறுத்தம் அமலில் இருக்கும் சூழலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு திடீரென புதிய எச்சரிக்கைகளை விடுத்தார். இறுதி ஒப்பந்தம் எட்டும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானிலும் அதைச் சுற்றியும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் டீலை இறுதி செய்யவில்லை என்றால் மோசமான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும், "ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்ட எதிரியைத் துல்லியமாக அழிப்பதற்குத் தேவையான அனைத்து அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள், ராணுவப் பணியாளர்கள், கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் என அனைத்தும் உண்மையான ஒப்பந்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மிரட்டல்
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதை அமைதி ஒப்பந்தம் வலியுறுத்துவதை டிரம்ப் சுட்டிக்காட்டினார். நிபந்தனைகள் மீறப்பட்டால், முன்பு கண்டிராத மிகப் பெரியளவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும், "எதாவது ஒரு காரணத்தால், இறுதி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால் மீண்டும் தாக்குதல் தொடங்கும்.. யாரும் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய மற்றும் மிக மோசமான தாக்குதல் நடத்தப்படும்" என்று அவர் எச்சரித்தார்.
நீடிக்கும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் இருந்த போதிலும், மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கிறது. ஒப்பந்தம் எட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஹிஸ்புல்லா இல்லை என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என வெளிப்படையாக அறிவித்தார். அதாவது லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
லெபனான் தாக்குதல்
லெபனானில் தாக்குதல்கள் தொடர்வதால், உலகின் பரபரப்பான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி குறித்து மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்தால் அது அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கருதுவோம் என ஈரான் கூறியுள்ளது. இதனால் ஹார்முஸை மீண்டும் மூடுவோம் என ஈரான் மிரட்டியுள்ளது. இருப்பினும், இதில் இதுவரை தெளிவான முடிவுகள் எதுவுமில்லை
-
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications