"இந்தியா மீதான டிரம்ப் வரி ரொம்ப நாள் நீடிக்காது.." பிரபல பொருளாதார வல்லுநர் சொன்ன முக்கிய தகவல்
வாஷிங்டன்: இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இது இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கிடையே இந்தியா மீதான அமெரிக்க வரிகள் குறுகிய காலமே நீடிக்கும் என்று பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், இது இரு நாடுகளின் ஒட்டுமொத்த உறவுக்கு எந்தவொரு நன்மையையும் பயக்காது என்றும் அனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் உக்ரைன் போர் நடப்பதாகச் சொல்லி இந்தியா மீது 50% வரியை டிரம்ப் அறிவித்தார். இதற்கான முதற்கட்ட 25% வரை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி நடைமுறைக்கு வந்தது. கூடுதல் 25% வரி ஆகஸ்ட் 27ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கூடுதல் வரி 50%ஆக உயர்ந்துள்ளது. அதிக வரியால் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

எச்சரிக்கை
இதற்கிடையே அமெரிக்க வரி தொடர்பாகப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா விதித்துள்ள 25% வரி இந்திய நிறுவனங்களுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என நாகேஸ்வரன் எச்சரித்தார். இந்த வரியின் தாக்கம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் உணரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீண்ட காலம் நீடிக்காது
இது தொடர்பாக ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த உயர் வரி விதிப்பு நீண்ட காலம் நீடிக்காது.. மாறாகக் குறுகிய காலமே இருக்கும் என்றே நினைக்கிறேன். மேலும், இந்தியா மீதான வரி விதிப்பு அமெரிக்காவுக்கும் விரும்பிய பலன்களைத் தராது.. மாறாக நெகடிவ் பாதிப்பையே தரும். இதை அமெரிக்கா உணர்ந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அமெரிக்க வரி நீண்ட காலம் நீடிக்காது. மேலும், அமெரிக்கா தரப்பில் சில மறுசீரமைப்புகள் நடந்து வருவதாகவே தெரிகிறது" என்றார்.
தற்போது இந்தியாவுக்குத் தான் டிரம்ப் தரப்பு இந்தளவுக்கு அதிக வரிகளை விதித்துள்ளது. மற்ற நாடுகளுக்கு இவ்வளவு வரிகளை டிரம்ப் நிர்வாகம் விதிக்கவில்லை. இந்தக் கூடுதல் வரி நியாயமற்ற ஒன்று என்று இந்தியா விமர்சித்துள்ளார். மேலும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கூட இந்தியா மீதான கூடுதல் வரியை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு எப்போது தெரியும்?
தொடர்ந்து பேசிய அவர், "நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், அதாவது ஆகஸ்ட் வரை, ஏற்றுமதி வரி இல்லாமல் நடந்தன. எனவே, கூடுதல் 25% வரியின் தாக்கம் இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இருக்கும்.. நிலைமை நீடித்தால், இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தாக்கம் இருக்கும். இந்த வரிகளின் தாக்கம் நிலைமை மாறாமல் இருந்தால் அடுத்த நிதியாண்டுக்கும் நீடிக்கலாம்.
எது முக்கியம்?
ஆகையால், நிதியாண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகள் முக்கியமானவை. ஆனால், அதற்குள் உடன்பாடு எட்டப்பட்டுக் கூடுதல் வரி நீக்கப்பட்டு இருக்கும் என்றே நம்புகிறேன். அதேநேரம் அடுத்த நிதியாண்டுக்கும் இது நீடித்தால், வேலைவாய்ப்பு மற்றும் ஜிடிபி வளர்ச்சி என இரண்டிலும் பாதிப்பு இருக்கும்" என்றார். மேலும், அமெரிக்காவுக்குப் பதிலாக வேறு ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம் என்ற போதிலும், அந்தளவுக்கு ஒரு மார்கெட்டை கண்டுபிடிப்பது கடினமான பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்துப் பேசிய ஆனந்த நாகேஸ்வரன், "ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதால், நாட்டில் நுகர்வு அதிகரிக்கும்.. இது ஏற்றுமதி இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயம் பெருமளவு சமாளிக்க உதவும்












Click it and Unblock the Notifications