Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க பங்கு சந்தையில் 'பாசிட்டிவ் சைன்'! டிரம்பின் உத்தரவால் சகஜ நிலை திரும்பியது!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இதனால் அந்நாட்டின் பங்கு சந்தையில் உயர்வு ஏற்பட்டிருக்கிறது.

மீண்டும் பழைய நிலைமைக்கு முதலீடுகள் திரும்ப தொடங்கியுள்ளன. இருந்தாலும் இது நிச்சயமற்ற தன்மையாகவே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

US stock market Trump

இன்றைய தினம் அமெரிக்க பங்கு சந்தையில் S&P 500 குறியீடு 9.5% வரை உயர்ந்திருக்கிறது. S&P 500 என்பது 500 சிறந்த நிறுவனங்களின் பங்கை கொண்டிருக்கும் பங்கு சந்தை குறியீடு ஆகும். இது குறைந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். உயர்ந்தால் நிலைமை அருமையாக இருக்கிறது என்று பொருள்.

அதேபோல வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தையில் Dow Jones மற்றும் Nasdaq ஆகிய பங்கு சந்தை குறியீடுகளும் அதிகரித்துள்ளன. ஆப்பிள், போயிங், கோகோ-கோலா என மிகப்பெரிய 30 நிறுவனங்களின் பங்கை உள்ளடக்கியதுதான் Dow Jones. இன்று காலை நிலவரப்படி Dow Jones பங்குகள் 7.9% உயர்வை எட்டியிருக்கின்றன. Nasdaq என்பது கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டெஸ்லா, நெட்பிளிக்ஸ் என 3000 நிறுவனங்களின் பங்குகளை பிரதிபலிக்கிறது. இது 12.2% அளவுக்கு உயர்வை சந்தித்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக வரி காரணமாக இந்த பங்கு சந்தை குறியீடுகள் அப்படியே சரிந்திருந்தன. குறிப்பாக S&P 500 குறியீடு 19% வரை சரிந்திருந்தது. 20 சதவிகிதத்தை இது தாண்டியிருந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். கடந்த 2008ம் ஆண்டு 'கிரேட் டிப்ரசன்' எனும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் S&P 500 குறியீடு 11% வரை சென்றிருந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் டிரம்ப் தனது வரி உத்தரவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.

என்னதான் அமெரிக்க பங்கு சந்தை உயர்வை சந்தித்திருந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் பங்கு சந்தை இன்னும் சீனுக்குள் வரவில்லை. அதுவும் சரிந்துதான் கிடக்கிறது.

லண்டன் FTSE 100: -2.9%
ஜப்பான் Nikkei: -3.9%
பிரான்ஸ் CAC 40: -3.3%

இது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "டிரம்ப் 90 நாட்கள் வரி நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்னரே ஐரோப்பிய மற்றும் ஜப்பான் பங்கு சந்தைகள் மூடப்பட்டு விட்டன. எனவேதான் அது சரிவில் இருப்பதை போன்று காட்டுகிறது. நாளை சந்தை திறக்கப்படும்போது பாசிட்டிவ் மாற்றம் இருக்கும்" என்று கூறியுள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில், சீனாவின் ஹாங்காங் +0.7%, ஷாங்காய் +1.3% பங்குகள் தொடர்ந்து உயர்ந்துதான் வந்திருக்கின்றன. இதை வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவுடன் பொருளாதார யுத்தம் செய்ய சீனா பொருத்தமான ஆள்தான் என்று தோன்றுகிறது.

இந்திய பங்கு சந்தையும் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியுடன்தான் இருந்தன. அதாவது, நேற்றைய நிலவரத்தை பொறுத்த அளவில் சென்செக்ஸ் 379.93 புள்ளிகள் (-0.51%) சரிந்து 73,847.15-ல், நிப்டி 136.70 புள்ளிகள் (-0.61%) சரிந்து 22,399.15-ல் முடிந்திருந்தது. இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் சந்தை விடுமுறை விடப்பட்டிருக்கிறது. நாளை சந்தை ஓபன் ஆகும்போது பங்குகள் உச்சம் பெற வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரம்ப்பின் வரி நிறுத்தம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீடித்தால் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்று.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+