டிரம்பால் இந்தியாவிற்கு 3 பக்கம் நெருக்கடி! ரூபாய் மதிப்பு படுத்துவிட்டது! மக்களுக்கு நேரடி பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா தரப்பிலிருந்து இந்தியாவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக, சமீபத்தில், மூன்று பெரிய அதிர்ச்சிகள் வந்துவிட்டன. முதலில், டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரி "குண்டு" போட்டார். அடுத்ததாக, திடீரென H1B விசா கட்டணத்தை $1 லட்சம் (அதாவது சுமார் 83 லட்சம் ரூபாய்!) ஆக உயர்த்தினார். இப்போது, இந்த தாக்கத்தால் இந்திய ரூபாய் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வரி... விசா கட்டணம்... ரூபாய் சரிவு!
அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகளால் பங்கு சந்தை ஏற்கனவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அதே சமயம் விசா கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதால், சென்செக்ஸ் மற்றும் நிப்டி மீள முடியாமல் தடுமாறின. முன்னதாக 25% சுங்கவரி விதித்திருந்த டிரம்ப், ரஷ்யா தொடர்பான எண்ணெய் மற்றும் ஆயுத கொள்முதல் விவகாரம் காரணமாக அதை 50% ஆக இரட்டிப்பாக்கினார்.
அதற்குப் பின், IT துறைக்கு நேரடி தாக்கம் ஏற்படுத்தும் வகையில் விசா கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக இந்திய ரூபாய் புதுப்புது சாதனைகளை படைத்து சரிந்துக்கொண்டே இருக்கிறது. புதன்கிழமை காலை ரூபாய் ஒரு டாலருக்கு ₹88.80 என வரலாற்றிலேயே மிகக் குறைந்த மதிப்பை எட்டியது.
எப்படி பாதிக்கும்?
🔻 ரூபாய் மதிப்பு குறையும்போது,
- இறக்குமதி பொருட்கள் விலை உயரும்.
- கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே பெரும் சுமை; ரூபாய் வீழ்ச்சி அதை மேலும் அதிகரிக்கும்.
- பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் உயரும்.
- அதுவே மொத்த பணவீக்கத்தையும் தூண்டும்.
🔻 மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க செல்லும் செலவுகள் கூடும்.
🔻 IT சேவை ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
ஆர்பிஐ முயற்சிகள்
"ரூபாய் ஒரு 'ஃப்ரீ ஃப்ளோட்டிங் கரன்சி', அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு கிடையாது. ஆனாலும், அதன் மாற்றங்களை கட்டுப்படுத்த ஆர்பிஐ தொடர்ந்து வேலை செய்கிறது," என்று முன்னாள் நிதி செயலாளர் மற்றும் தற்போதைய செபி தலைவர் தெரிவித்துள்ளார். சுருக்கமாக சொன்னால்: டிரம்பின் வரி, விசா கட்டணம், ரூபாய் சரிவு - மூன்றும் சேர்ந்து இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு டிரிப்பிள் டென்ஷன்! இதன் விளைவுகள் அடுத்த சில வாரங்களில் மக்கள் வாழ்க்கையையே நேரடியாக தொடும் நிலைக்கு போகும் அபாயம் இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications