ஈரானில் நேரடியாக களமிறங்கும் அமெரிக்க ராணுவம்.. டிரம்ப் சொன்ன வார்த்தை.. பேரழிவு ஆரம்பம்?
வாஷிங்டன்: அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதற்கிடையே ஈரானில் அமெரிக்க ராணுவத்தைக் களமிறக்குவது தொடர்பாக டிரம்ப் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதுவரை ஏவுகணை தாக்குதல்கள் மட்டுமே நடந்து வரும் சூழலில், ராணுவம் களமிறக்கப்பட்டால் போர் மிக மோசமாக வெடிக்கும் ஆபத்து இருப்பதால் உலக நாடுகள் நிலைமை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
அமெரிக்கா- இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய தாக்குதல்கள் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரான் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க முகாம்களைக் குறிவைத்தும் இஸ்ரேலை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.

டிரம்ப்
அடுத்த கட்டமாக ஈரானில் அமெரிக்க ராணுவம் நேரடியாகக் களமிறக்கவுள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார். ராணுவம் களமிறக்கினால் நிலைமை மோசமாகும் என்பதால் உலக நாடுகள் இதை உற்றுக் கவனித்து வருகின்றன. இதற்கிடையே ராணுவம் உள்ளிட்ட தரைப்படைகளை இறக்கும் விவகாரத்தில் டிரம்ப் யூடர்ன் போட்டுள்ளார். அதாவது தற்போதைய சூழலில் அமெரிக்காவின் தரைப்படைகளைக் களமிறக்க வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அதேநேரம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கியதற்கு ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். இது தொடர்பாக நியூஸ்நேஷன் என்ற ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "சவுதியில் உள்ள எங்கள் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதற்கெல்லாம் நிச்சயம் பதிலடி கொடுப்போம். பதிலடி எப்படி இருக்கும் என்பதை நீங்களே பார்க்கத் தான் போகிறீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
யூடர்ன்
ஈரானில் அமெரிக்கத் தரைப்படைகள் களமிறங்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "தற்போதைய சூழலில் ஈரானில் தரைப்படைகளைக் களமிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்" என்று வழக்கம் போல யூடர்ன் போட்டார்.
முன்னதாக நேற்றைய தினம் நியூயார்க் போஸ்ட்டிடம் அளித்த பேட்டியில் டிரம்ப் தரைப்படைகளைக் களமிறக்க வாய்ப்பு இருக்கிறது என்பது போலவே கூறியிருந்தார். அதாவது டிரம்ப், "மற்ற அதிபர்கள் போல் தரைப்படை களமிறங்காது என சொல்ல மாட்டேன். இப்போது தேவையில்லை.. தேவை ஏற்பட்டால் களமிறக்கப்படும்" என்று அவர் கூறியிருந்தார். இப்போது அப்படியே யூடர்ன் போட்டு ராணுவம் உட்படத் தரைப்படைகளைக் களமிறக்கத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
ஏவுகணைகள் தாக்குதல்கள்
பொதுவாகவே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படும்போது முதலில் ஏவுகணை தாக்குதல்களே நடக்கும். அதன் பிறகே விமானப் படை, கடற்படைகள் பயன்படுத்தப்படும். தரைப்படைகள் களமிறக்கப்படுவது போரின் உச்சபட்சமாகக் கருதப்படும். இப்போது அமெரிக்கா தனது ராணுவ முகாம்கள் மற்றும் கடற்படைகளை வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில் தான் டிரம்ப் நேற்றைய தினம் தரைப்படைகளை, அதாவது அமெரிக்க ராணுவம் மற்றும் மெரைன் கார்ப்ஸ், களமிறக்கப்படலாம் என்று டிரம்ப் கூறியிருந்தார். அப்படி அமெரிக்க ராணுவம் களமிறங்கினால் அது மிக மோசமான போராக மாறும் என்பதால் உலக நாடுகள் நிலைமை பதற்றமாகக் கவனிக்க ஆரம்பித்தன. இந்தச் சூழலில் தான் டிரம்ப் வழக்கம் போல ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
எவ்வளவு காலம் தொடரும்?
இந்த அமெரிக்கா ஈரான் மோதல் எங்கு மற்ற மோதல்களைப் போல ஆண்டுக் கணக்கில் தொடருமோ என்ற அச்சங்கள் எழுந்திருந்தன. இருப்பினும், இந்த மோதல் 4 வாரங்கள் தொடரும் என்றும் அதற்கான திட்டமே அமெரிக்கா போட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்படி மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
-
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ஈரானும் ஊரானும் வாழட்டும்! நீங்க எந்த கட்சி அமெரிக்காவா? ஈரானா? தனது ஸ்டைலில் கமல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications