"இமாலய ஆதரவு.." பைடனை காலி செய்ய போகும் டிரம்ப்.. ஒபாமாவை விட பெரிய வெற்றி கிடைக்குமாம்! புது சர்வே
வாஷிங்டன்: அடுத்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் வெல்ல யாருக்கு வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்து இரு முக்கிய சர்வே வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்குப் பல மாதங்கள் இருந்தாலும் கூட இப்போதே அங்கே தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதேபோல கருத்துக்கணிப்புகளும் ஆரம்பித்துவிட்டன.

அதன்படி அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான என்பிசி மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி நியூஸ் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
போட்டி யாருக்கு: அங்கே இப்போது குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. டிரம்ப் தொடங்கி பலரும் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அதில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட அதிக ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, அடுத்தாண்டு அங்கு நடக்கும் அதிபர் தேர்தலில் பைடன் மற்றும் டிரம்ப் இடையே தான் போட்டி. இருவர் மீதும் அமெரிக்காவில் எதிர்ப்பு இருந்தாலும், போட்டி இவர்களுக்கு மத்தியில் தான். இருவரில் ஒருவரை தான் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
குறிப்பாக அமெரிக்க அதிபராக இருக்கும் பைடனுக்கான ஆதரவு கடுமையாகக் குறைந்துள்ளது. அந்நாட்டின் என்.பி.சி ஊடகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் பைடன் மீது 56% மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏபிசி வெளியிட்ட சர்வேயிலும் 56 சதவீத பேர் பைடன் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்றே கூறியுள்ளனர். இதன் மூலம் அமெரிக்க மக்கள் அதிபர் பைடன் மீது கோபத்தில் இருப்பது தெரிய வருகிறது.
குடியரசு கட்சி: அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வே சுவாரசியமாக இருக்கும். அங்கே குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரண்டும் தான் பிரதானம். இரு கட்சி சார்பிலும் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்கள் மத்தியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டே வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். அதன்படி குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் பலரும் ஆர்வம் தெரிவித்த போதிலும், இதில் டிரம்பிற்கே ஆதரவு அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்பிற்கு 59% ஆதரவு இருக்கிறது. அவருக்கு அடுத்து போட்டியாளரான புளோரிடாவின் கவர்னர் ரான் டிசாண்டிசுக்கு வெறும் 16 சதவீதம் மட்டுமே ஆதரவு இருக்கிறது. இதில் இருந்தே டிரம்ப்பிற்கு குடியரசு கட்சியினர் மத்தியில் எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
டிரம்ப் மீதான கிரிமினல் விசாரணை பல நிலுவையில் இருக்கும் போதிலும் அது அவரது செல்வாக்கைக் குறைக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளால் டிரம்பிற்கு பின்னடைவு ஏற்படுமோ என சரிபாதி ஆதரவாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மெகா வெற்றி: தி வாஷிங்டன் போஸ்ட்/ஏபிசி நியூஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பைடனை காட்டிலும் டிரம்பிற்கு 10% ஆதரவு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை 10% வாக்கு வித்தியாசம் எல்லாம் ரொம்ப பெரியது. 1984ஆம் ரொனால்ட் ரீகனுக்கு பிறகு இந்தளவுக்கு வாக்கு வித்தியாசம் இருந்ததே இல்லை. கடந்த 2008இல் ஒபாமா முதல்முறை வென்ற போது கூட 7% மட்டுமே வாக்கு வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்க முடியாது: இருப்பினும், இந்த கருத்துக்கணிப்பை வழக்கம் போல பைடன் தரப்பு நிராகரித்துள்ளது. பைடன் அதிபராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க மக்களின் ஆதரவு பைடனுக்கே அதிகம் இருப்பதாகவும் பைடன் தரப்பின் செய்தித் தொடர்பாளர் கேவின் கூறியுள்ளார். மேலும், அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் பைடன் தான் வெல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கு மேல் இருக்கிறது. தேர்தல் காலம் நெருங்கும் போது அங்கே பல அரசியல் பூதங்கள் கிளம்பும். அவை தேர்தலை முற்றிலுமாக புரட்டிப் போடவும் வாய்ப்பு இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications