கிரீன் கார்டு பெற புதிய கட்டுப்பாடுகள்.. இந்தியர்களுக்கு நெருக்கடி! டிரம்ப் போடும் புதிய பிளான்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் சுமார் 10 லட்சம் பேர், கிரீன் கார்டு வேண்டி காத்திருக்கிறார்கள். இந்நிலையில், கிரீன் கார்டு பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார். இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ளே வந்தவர்களை வெளியேற்ற வெண்டும் என்று டிரம்ப் உட்பட அவர் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கையில் பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு பெற தடை விதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல்படி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான், சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, மியான்மர், சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கிரீன் கார்டு மற்றும் விசா ஒப்புதல்களைத் தடுப்பதற்கான திட்ட வரைவு ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் அவர்களுக்கும் இந்த விதி பொருந்தலாம்.
அதாவது இந்த 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த தடைக்கு முன்னர் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தாலும் அவர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்க தடை விதிக்க டிரம்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் வசிப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியாகும். இதை வைத்து அமெரிக்க மக்கள் பலரும் பல்வேறு சலுகைகளை பெற முடியும். ஆனால் கிரீன் கார்டு பெற்ற நபர், அமெரிக்காவை விட்டு ஓராண்டுக்கும் மேல் வெளிநாட்டில் தங்கியிருப்பின் அவரது கிரீன் கார்டு வாபஸ் பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கிரீன் கார்டை கொண்டுதான் அமெரிக்காவின் குடியுரிமையை பெற முடியும் என்பதால், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஏற்கெனவே H-1B விசாவின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் தலைவர்கள் பேசி வருகிறார். தற்போது ஆண்டுக்கு 85,000 அளவுக்கு H-1B விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில் இந்த எண்ணிக்கையை வெறும் 10,000 ஆக குறைக்க வேண்டும் என்றும், இந்த 10,000 எண்ணிக்கையும் மருத்துவ நிபுணர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கு தேவையான மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை குறையும், இதனால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் தற்போது கிரீன் கார்டு பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது விவாதங்களை தூண்டியிருக்கிறது.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்











Click it and Unblock the Notifications