வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

''அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது''.. வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பெருமிதம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. ஆபத்தை சாத்தியமாக மாற்றுகிறது. நெருக்கடியில் வாய்ப்பை கண்டுணரந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கடந்த வருடம் தினமும் 3 லட்சத்தை கடந்து சென்ற கொரோனா பாதிப்பு தற்போது 50,000 அளவில் குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் 15 கோடியை தாண்டியது கொரோனா.. தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம்உலகளவில் 15 கோடியை தாண்டியது கொரோனா.. தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம்

அமெரிக்காவில் கொரோனா

அமெரிக்காவில் கொரோனா

உலகின் வலலரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கடந்த ஆண்டு கொரோனா பாடாய்படுத்தி விட்டது. இப்போதும் அதிக தொற்று பாதிப்பில் அமெரிக்காவே முதலிடம் பிடித்துள்ளது. அங்கு இதுவரை மொத்தம் 32,927,091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.587,384 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 25,521,913 பேர் குணமடைந்துள்ளனர்.

கூடுதல் தளர்வுகள்

கூடுதல் தளர்வுகள்

அங்கு 6,817,794 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர தொற்று பரவல் காரணமாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கும் போடப்பட்டது. இதன் காரணமாக அங்கு தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டது. தினமும் 50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளே பதிவாகி வருகின்றன.

மோசமான தாக்குதல்

மோசமான தாக்குதல்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று ஒரு நூற்றாண்டின் மிக மோசமான ஒன்றாகும்.பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும். உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நமது ஜனநாயகம் மீதான மோசமான தாக்குதலாகும்.

முன்னேற்றம் நோக்கி நகர்கிறது

முன்னேற்றம் நோக்கி நகர்கிறது

வெறும் 100 நாட்களுக்குப் பிறகு நான் தேசத்திற்கு ஒன்றை தற்போது மீண்டும் சொல்ல முடியும். அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. ஆபத்தை சாத்தியமாக மாற்றுகிறது. நெருக்கடியில் வாய்ப்பை கண்டுணரந்துள்ளது என்று ஜோ பிடன் தெரிவித்தார். 1.8 டிரில்லியன் டாலர் முதலீட்டில் குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றில் முன்னேற்ற திட்டங்கள், மேலும் 2.3 டிரில்லியன் டாலர் செலவில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் ஆகியற்றை செய்லபடுத்த பைடன் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

English summary
America is moving towards progress again. Makes risk possible. U.S. President Joe Biden has told the White House that he sees an opportunity in crisis
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X