அமெரிக்கால் மிக மிக மோசமான உச்சத்தில் கொரோனா- ஒரே நாளில் 1,56,785 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் அமெரிவிக்காவில் மிக மிக மோசமான உச்சத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,56,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,43,11,615 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் கொரோ மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 ஆக உள்ளது.

U.S. reports world record of 1,56,785 Coronavirus cases in single day

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 41,659 ஆகவும் இத்தாலியில் 37,255 பிரான்சில் 32,095 ஆகவும் உள்ளது.

ஆனால் இதுவரை உலக அளவில் எந்த ஒருநாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக மிக மோசமான உச்சத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் சனிக்கிழமையன்று மட்டும் மொத்தம் 1,56,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,258. அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில் 727 பேரும் 3-வதாக இந்தியாவில் 449 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+