Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சக்கட்ட டென்ஷன்.. உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்.. எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம்..!

உக்ரைனில் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் உக்ரைன் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது.. இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது... இதனால் எந்த நேரத்திலும் போர் வரலாம் என்பதால், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேட்டோவின் நட்பு நாடுகள் பட்டியலில் உக்ரைன் இடம்பிடித்துள்ளது... இதனால் சர்வதேச பாதுகாப்பு கிடைக்கும்.. அத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர்ந்துவிடலாம் என்பதால், உக்ரைன் இவ்வாறு நேட்டோவில் அங்கம் வகிக்க முனைந்துள்ளது.

ஆனால் இந்த முயற்சிக்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல், உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல ரூபங்களில் ஆபத்து வந்துவிடும் என்று ரஷ்யா கருதுகிறது.. இதுதான் தற்போது விவகாரமாக வெடித்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பக்கத்து நாடான உக்ரைனை அனுமதிக்க ரஷ்யா விரும்பவில்லை.. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துவிடுமோ என்ற அளவுக்கு கடந்த சில நாட்களாகவே பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.. ரஷ்யாவின் இந்த போக்குக்கு அமெரிக்கா உட்பட அனைத்து ஐரோப்பிய வல்லரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. அதன் நடவடிக்கையை கண்டித்தும், தலையில் குட்டியும் வருகின்றன. ஆனாலும் ரஷ்யா தன் பிடிவாதத்தை அதிகப்படுத்தி கொண்டுதான் போய் கொண்டிருக்கிறது.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இதனால் அதிகரித்துவரும் போர்ச்சூழல் காரணமாக, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உக்ரேனில் வசித்துவரும் பிற நாட்டு மக்கள் வெளியேறிவிட்டனர்.. முன்னதாக, ரஷ்யா - உக்ரேன் நாட்டின் எல்லையில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்து விட்டன.. அதனால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து சூழலாம் என்ற நிலைமை ஏற்பட்டு வந்து வந்த நிலையில், அதற்கான சூழல்தான் இப்போது உருவாகி உள்ளது.

புடின் உத்தரவு

புடின் உத்தரவு

காரணம், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தன்னாட்சி நகரங்களாக ரஷ்யா நேற்று முன்தினம் அங்கீகரித்திருந்தது.. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால், ரஷ்யா தனது படைகளை அந்த பகுதியில் நிலைநிறுத்தியது. இதற்கு உலக நாடுகளே கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்தன. அதனால்தான், தங்களின் முந்தைய நடவடிக்கைகளுக்காக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாக ஜோபிடனும் அறிவித்திருந்தார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன... உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளன.. இந்த விஷயம் சாட்டிலைட் படம் மூலம் அம்பலமாகிவிட்டது.. அதனால், எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. அதனால்தான், உடனடியாக உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி, இந்த அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.. டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும்... இந்த உத்தரவானது, 30 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் அதன்பின்பு நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலானது, அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு பக்கம், ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை, கூடிய சீக்கிரம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் உக்ரேன் அரசு தெரிவித்துள்ளது..

கடைசி வேண்டுகோள்

கடைசி வேண்டுகோள்

இந்த போரை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு வருமாறு உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கடைசியாக வேண்டுகோளை, மிகவும் உருக்கத்துடன் விடுத்துள்ளார்.. காரணம், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தவோ, போர் தொடுக்கவோ உக்ரைனுக்கு எந்தவிதமான எண்ணமுமில்லை என்று அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ஒருவேளை இரு நாடுகளுக்கும் போர் நடந்துவிட்டால், அது 2-ம் உலக போருக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும், மக்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை என்பது தலைவிரித்தாடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+