ஏமாற்றிய நேட்டோ நாடுகள்? தனித்து விடப்பட்ட உக்ரைன் அதிபர்.. அந்த போட்டோவை பாருங்க.. போச்சு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நேட்டோ நாட்டில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனியாக நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன்!

ukraine-volodymyr-zelensky-standing-alone-in-nato-summit-becomes-a-discussion-in-social-media

பல காலமாக உக்ரைன் பிரச்சனை நிலவி வந்தாலும்.. உக்ரைன் நேட்டோவில் இணைய வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக காட்டி வரும் ஆர்வம்தான்தான் இந்த மோதலுக்கு காரணம். சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது.

ரஷ்யாவின் பிரச்சனையே உக்ரைன் திடீரென அமெரிக்காவுடனும், ஐரோப்பியா உடனும், நேட்டோ நாடுகள் உடனும் நெருக்கம் காட்டுவதுதான். ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும்.

இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவின் முழு நேர கூட்டாளி ஆகும் முன் அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ரஷ்யா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவின் பெரும்பாலான எல்லையை உக்ரைன்தான் கவர் செய்கிறது. இதற்காக முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள்.

இதனால் ஆயுதத்தை கையில் எடுத்த ரஷ்யா உக்ரைனை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தது. ஏற்கனவே 2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிமியா போலவே உக்ரைனின் மற்ற பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்ற முயன்று வருகிறது.இப்போது மொத்தமாக உக்ரைனை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்று வருகிறது. இதுவே தற்போது போராக வெடித்துள்ளது.

ஆனால் போர் தொடங்கி ஒன்றரை வருடம் ஆகியும் கூட உக்ரைன் அரசு நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிடவில்லை. எப்படியாவது நேட்டோவில் இணைந்தேவிட வேண்டும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முயன்று கொண்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது இலித்துவானியா நாட்டில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடக்கிறது.

இதில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் கலந்து கொண்டுள்ளார். இதில் நடந்த பேச்சுவார்த்தையில்,. உக்ரைனை உடனே நேட்டோவில் சேர்த்துக்கொள்ள முடியாது. உக்ரைனை சேர்த்துக்கொள்ள எல்லா நேட்டோ நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். எல்லா நாடுகளும் ஒப்புக்கொண்டால்தான் நேட்டோவில் உக்ரைனை சேர்த்துக்கொள்வோம் என்று நேட்டோ உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

அதோடு நேட்டோ நாடுகள் இதற்காக கால நேரத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்றும் நேட்டோ கூறி உள்ளது. இதன் அர்த்தம் நேட்டோ உக்ரைனை சேர்த்துக்கொள்ளுமா, கொள்ளாதா என்று தெரியாது.. அதற்கு கால நிர்ணயத்தையும் அறிவிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட உக்ரைனுக்கு பலத்த இடியாக அமைந்துள்ளது.

ஏனென்றால் நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் ரஷ்யா போரை நிறுத்தும். உக்ரைன் நேட்டோவில் இணையாத பட்சத்தில் நேட்டோ நேரடியாக உக்ரைனுக்கு போர் உதவிகளை செய்ய முடியாது. இது கிட்டத்தட்ட உக்ரைனுக்கு பெரிய தோல்விதான். நேட்டோவின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் நேட்டோ நாட்டில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனியாக நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மீட்டிங் புகைப்படமே எடுக்கும் இடத்தில் யாரும் பேச ஆள் இல்லாமல் தனியாக நடுவில் கேமராவை பார்த்தபடி செலன்ஸ்கி நிற்கும் புகைப்படம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. நேட்டோ நாடுகள் உக்ரைன் அதிபரை ஏமாற்றிய நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனியாக நிற்கும் புகைப்படம் இணையத்தையே உலுக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+