பாராட்டு.. பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க ஊடகங்கள்!ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கடி என எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, ‛‛இது போருக்கான நேரம் இல்லை'' என கூறினார். இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடியை அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்துள்ள நிலையில் இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

இதேபோல் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

விளாடிமிர் புதினுடன் சந்திப்பு

விளாடிமிர் புதினுடன் சந்திப்பு

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். மேலும் உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ல் போர் தொடுத்த நிலையில் இருநாட்டு தலைவர்கள் தொலைபேசி வழியாக பேசி வந்தாலும் கூட முதல் முறையாக நேற்று தான் சந்தித்தனர்.

போரை நிறுத்த கூறிய பிரதமர் மோடி

போரை நிறுத்த கூறிய பிரதமர் மோடி

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவும், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பிரதமர் நரேந்திர மோடி, புதினிடம் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ‛‛இது போருக்கான காலம் அல்ல. நான் உங்களிடம் தொலைபேசி அழைப்பின்போது பல முறை இதைப் பேசி இருக்கிறேன். ஜனநாயகம், இருநாட்டு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்'' என கூறினார்.

அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு

அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி உள்ளனர். உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக ரஷ்யாவை எதிர்க்கும் நிலையில் தான் இந்தியா நடுநிலை வகித்து வந்தது. இந்நிலையில் இது போருக்கான காலம் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்ததை குறிப்பிட்டு அமெரிக்க பத்திரிகைகள் அவரை பாராட்டி உள்ளன. அதேநேரத்தில் இந்தியாவும் போரை விரும்பாதது என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியில் இருப்பது என்ன?

செய்தியில் இருப்பது என்ன?

இதுதொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் சார்பில், ‛‛இந்திய பிரதமர் மோடி உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கண்டித்துள்ளார்'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ‛‛ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக பிரதமர் மோடி புதினை கண்டித்துள்ளார் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சார்பில், ‛‛இந்தியாவின் தலைவர் புதினிடம் இது போருக்கான காலம் அல்ல'' என கூறியுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செய்திதான் இருஇணையதள பக்கங்களிலும் முதன்மையான செய்தியாக இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிலை என்ன?

போர் நிலை என்ன?

உக்ரைன் நாடு அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைனில் போர் நடவடிக்கையை தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 7 மாதமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் இறந்துள்ளனர். போரை கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளதோடு, தொடர்ந்து உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+