துள்ளி குதிக்கும் புதின்.. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீக்கும் அமெரிக்கா? கதறும் ஐரோப்பிய நாடுகள்
வாஷிங்டன்: உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவுதி அரேபியாவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா - அமெரிக்கா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ‛ஜாக்பாட்'அடிப்பதோடு, அமெரிக்காவை நம்பிய ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இந்த போர் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். முதற்கட்டமாக நேற்றைய தினம் சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்தது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து நேற்று பேச்சுவார்த்தை என்பது நடந்தது.

ரஷ்யா சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அதிபர் விளாடிமிர் புதினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அமெரிக்கா சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்பின் தேசிய ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்தது.
இதில் போர் நிறுத்தம் தொடர்பான நடவடிக்கையை முன்னெடுக்க தனித்தனியாக உயர்மட்ட அளவிலான குழுக்கள் அமைக்க ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது. இதுபற்றி அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையி்ல, ‛‛இந்த மீட்டிங்கில் 3 முக்கிய விஷயங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மாஸ்கோ, வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா, ரஷ்யாவின் தூதரங்களில் அதிகாரிகள் நியமனம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட அளவில் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா உடன் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
நேற்றைய பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அடுத்தக்கட்டமாக நடக்கும் பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒரு நல்ல செய்தியை அமெரிக்கா கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த பேட்டியில், ‛‛ ரஷ்யா மற்றும் அமெரிக்கா உடன் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்று கூறினார். இந்த தகவல் என்பது ரஷ்யாவும் - அமெரிக்காவும் நெருக்கமாக செல்வதை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. ஏனென்றால்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அதன்பிறகு நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. அப்போது அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இருந்தார். அவருக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல உறவு இல்லை.
ஆனால் இப்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே நல்ல பந்தம் உள்ளது. இதற்கு முன்பு டிரம்ப் அதிபராக இருந்தபோது புதினை சந்தித்து பேசியும் உள்ளார். அதோடு டிரம்பை பொறுத்தவரை ரஷ்யா மற்றும் அதன் அதிபர் விளாடிமிர் புதின் மீது நல்ல அபிப்ராயம் என்பது உள்ளது. இதனால் தான் அதிபராகும் முன்பே புதினை சந்தித்து பேசுவேன் என்று கூறினார். மேலும் நேற்றைய பேச்சுவார்த்தையிலும் அமெரிக்காவில் உள்ள ரஷ்யா தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதுமட்மட்டுமின்றி ரஷ்யாவுடன் பொருளாதார உறவை வலுப்படுத்துவதாக அமெரிக்க கூறியுள்ளது. தற்போது ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் கேட்டபோது, ‛‛ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அமலில் தான் உள்ளன. உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் இந்த பொருளாதார தடைகள் என்பது நீக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுவார்கள். அதன்பிறகு இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்'' என்றார். இதன்மூலம் விரைவில் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இது நடக்கும் பட்சத்தில் ரஷ்யாவின் நிதி நிலைமை மேம்படும். அமெரிக்கா - ரஷ்யா இடையே வர்த்தக உறவு வலுப்பெறும். இது ரஷ்யாவுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். அதேவேளையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை என்பது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய், கியாஸ் உள்ளிட்டவற்றில் ரஷ்யாவை தான் நம்பி உள்ளன. ஆனால் கடந்த 2022ல் உக்ரைன் போர் நடவடிக்கையால் அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இப்போது அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்துள்ளது. அதேவேளையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு பக்கப்பலமாக இருந்த ஐரோப்பிய நாடுகளை டொனால்ட் டிரம்ப் கழற்றிவிட்டுள்ளார். புரியும்படி கூற வேண்டும் என்றால் அமெரிக்காவை நம்பி ஐரோப்பிய நாடுகள் மோசம் போய்விட்டன.
இப்போது அமெரிக்காவை பின்பற்றி ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் இணக்கமாக செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் சிக்கலில் தவிக்கின்றன. இதனால் தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தங்களையும் பிரதிநிதிகளாக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றனர். ஆனால் இதனை டிரம்ப் விரும்பாத நிலையில் ஐரோப்பிய நாடுகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சமீபகாலமாக உலக அரசியலில் ஐரோப்பியா ஓரம்கட்டப்பட்டு வருகிறது. அது உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் உறுதியாகி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications