தங்கத்திற்காக பூமிக்குள் மனிதர்கள்! AC இல்லாட்டி நொடி வாழ முடியாது! தென்னாப்பிரிக்கா தங்கச் சுரங்கம்
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் உள்ள சுரங்கம் ஒன்று, மனிதகுலத்தின் பொறியியல் சாதனைகளுக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்துள்ளது.. பூமியின் அடி ஆழத்தில் இவ்வளவு பெரிய கட்டமைப்பு இருப்பதே ஒரு மிகப்பெரிய அதிசயம்தான்.. இது எப்படி சாத்தியம்?
இதை பற்றின செய்திகள்தான் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது..தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகில் அமைந்துள்ளது இந்த எம்போனெங் (Mponeng) என்ற தங்கச் சுரங்கம்.. இந்த அதிசய சுரங்கம் சுமார் 4 கிலோமீட்டர் அதாவது 4000 மீட்டர் ஆழம் கொண்டது.

தென்னாப்பிரிக்கா தங்கச் சுரங்கம்
இதன் ஆழத்தை எளிதாக நாம் கற்பனை பண்ண முடியாது.. ஏன் தெரியுமா? உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் "புர்ஜ் கலீஃபா" போன்ற ஐந்து கட்டிடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் எவ்வளவு உயரம் வருமோ, அந்த அளவு ஆழத்திற்கு இது பூமியை துளைத்து செல்கிறதாம்..சுரங்கம் என்பதால், இது வெறும் பள்ளம் கிடையாது.. பூமிக்கு அடியில் இயங்கும் ஒரு சிறு நகரத்தை போன்ற பிரம்மாண்டமான கட்டமைப்பாகும்.
பூமிக்கு அடியில் தங்கம்
பூமியின் உட்பகுதியை நோக்கி செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிப்பது இயற்கையானது... அதிலும் இந்த சுரங்கத்தில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள பாறைகளின் வெப்பநிலை சுமார் 66 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது. இந்த வெப்பநிலையில் மனிதர்கள் உயிர்வாழ்வதே சாத்தியமற்றது.. அதனால்தான், அங்கு பிரம்மாண்டமான குளிரூட்டும் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
அப்படியிருந்தும்கூட, சுரங்கத்தில் வெப்பம் இருக்கத்தான் செய்யும்.. இதனை குறைப்பதற்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான டன் பனிக்கட்டிகள் மற்றும் சேறு கலந்த குளிர்ந்த கலவை குழாய்கள் மூலம் உள்ளே அனுப்பப்படுகிறது.
இது சுரங்கத்தின் வெப்பநிலையை சுமார் 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பராமரிக்க உதவுகிறது. இந்த ஏர் கண்டிஷனிங் வசதி மட்டும் இல்லையென்றால், தொழிலாளர்கள் அங்கு ஒரு நிமிடம் கூட தங்கியிருக்க முடியாது.
இந்த சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பயணம் மிகவும் சவாலானது. தரைப்பகுதியில் இருந்து சுரங்கத்தின் கடைசி பகுதியை அடையவே சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகிறது. இதற்காக எலிவேட்டர்ஸ் எனப்படும் அதிவேக மின் தூக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின் தூக்கிகள் வினாடிக்கு 16 மீட்டர் என்ற வேகத்தில் கீழே இறங்குகின்றன. இது உலகின் அதிவேக பயணங்களில் ஒன்றாகும்.
இவ்வளவும் எதற்காக தெரியுமா?
இவ்வளவு ஆழத்தில் தங்கம் மிகப்பெரிய பாறைகளாக கிடைப்பதில்லை, மாறாக, மிகவும் மெல்லிய அடுக்குகளாகவே காணப்படுகிறது. ஒரு டன் எடையுள்ள பாறையைத் தோண்டி எடுத்தால், அதில் இருந்து மிகக்குறைந்த அளவிலான தங்கம் மட்டுமே பிரித்தெடுக்கப்படுகிறது. இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு சுமார் 8,000 கிலோ தங்கம் இந்தச் சுரங்கத்திலிருந்து கிடைக்கிறது.சுரங்கத்திற்குள் நிலவும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் போன்ற உயிர் பயத்திற்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தினமும் கடுமையாக உழைக்கின்றனர்.
தங்கக் கோட்டை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தரைப்பகுதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தூய்மையான காற்று உள்ளே செலுத்தப்படுகிறது.இவ்வளவு கடினமான சூழலில், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தங்கம் பிரித்தெடுக்கப்படுவது உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது...
இன்னொரு விஷயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.. இங்கு வெட்டியெடுக்கப்படும் பாறைகளில் ஒரு டன் எடையுள்ள பாறையை சுத்திகரித்தால், சராசரியாக 8 முதல் 10 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு குறைந்த அளவிலான தங்கத்திற்காக 4 கி.மீ ஆழம் வரை செல்வது, அந்தத் தங்கத்தின் தரம் மற்றும் சந்தை மதிப்பை உணர்த்துகிறது.. இந்த உலகின் ஆச்சரியம் எப்படியெல்லாம் இருக்கிறது பாருங்கள்...!!












Click it and Unblock the Notifications