ரஷ்ய எண்ணெய்யை வாங்க.. அனுமதி கொடுத்த அமெரிக்கா! பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா நல்ல நண்பன் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றியிருக்கிறது என்று சொல்லி, ரஷ்ய எண்ணெய்யை தற்காலிகமாக வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே நாம் ரஷ்யாவிடமிருந்துதான் எண்ணெய் வாங்கியிருந்தோம். ஆனால், வரி என்று சொல்லி இந்த கொள்முதலை நிறுத்தியது அமெரிக்காதான். தற்போது இதே அமெரிக்கா, ரஷ்ய எண்ணெய் வாங்க அனுமதித்திருக்கிறது. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே என்று பலரும் கூறியுள்ளனர்.

US Allows India to Buy Russian Oil

என்ன நடந்தது?

இந்தியாவுக்கு, ரஷ்யா குறைவான விலையில் கச்சா எண்ணெய்யை சப்ளை செய்து வந்தது. எந்த அளவுக்கு குறைவு எனில், வளைகுடா நாடுகளிலிருந்து நமக்கு கிடைக்கும் எண்ணெய்யின் விலையை விட, 5 டாலர்கள் வரை குறைவான விலையில் ரஷ்ய எண்ணெய் கிடைக்கும். ஆனால், குறுக்கே வந்த கவுசிக்(அமெரிக்கா), ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால், அந்நாட்டுக்கு நிறைய காசு போகுது. இந்த பணத்தை ரஷ்யா, உக்ரைனுக்கு எதிரான போரில் செலவு செய்யுது.

ஆகவே, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 25% வரி, இந்த புடிச்சுக்கோ என போட்டுவிட்டது. ஏற்கெனவே இந்தியா மீது 25% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்த வரி 50% ஆக அதிகரித்தது.

குறுக்கே வந்த கவுசிக்

இதெல்லாம் வேலைக்கே ஆகாது என்று உணர்ந்த இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. சொன்னதை இந்தியா கேட்டுக்கொண்டது என்று சொல்லி, 25% வரியை ரத்து செய்தது. இப்படி இருக்கையில் தற்போது வளைகுடா நாடுகளில் போர் வெடித்திருக்கிறது. இது இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் சப்ளையை பாதித்திருக்கிறது. வேறு வழியே இல்லை, ரஷ்யா மட்டும்தான் நமக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன். எனவே ரஷ்யாவிடம் டீல் பேச இந்தியா ரெடியானது.

மறுபடியும் குறுக்கே வந்த கவுசிக், சரி ரஷ்யாவிடம் வாங்கிக்கோங்க. ஆனா.. 30 நாட்களுக்கு மட்டும்தான் வாங்கனும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.

பருத்தி மூட்டை கதை

அமெரிக்காவின் நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட், எரிசக்தி துறை செயலர் கிறிஸ் ரைட் இது குறித்து செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியா நல்ல நண்பன். இதற்கு முன்னர் விதிக்கப்பட்ட தடைகளை இந்தியா, மதித்து நடந்துக்கொண்டது. தடை காரணமாக, ரஷ்ய எண்ணெய்க்கு பதிலாக, அமெரிக்க எண்ணெய்யை வாங்க ஒப்புக்கொண்டது. இருப்பினும் தற்போது ஏற்பட்டிருக்கும் தற்காலிக சப்ளை தடைகள் காரணமாக, மீண்டும் ரஷ்ய எண்ணெய்யை வாங்க அனுமதி அளித்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

இதெல்லாம் ஏற்கெனவே நாங்கள் செய்துக்கொண்டுதான் இருந்தோம். இடையில் வரி போட்டு, வர்த்தகத்தை கெடுத்து, மீண்டும் ரஷ்ய எண்ணெய்யை வாங்க சொல்வதெல்லாம் பருத்தி மூட்டை குடோன் கதைான் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

உஷாரான ரஷ்யா

மார்ச் 5ம் தேதிக்கு முன்னர், எண்ணெய் நிரபப்பட்டு கடலில் உள்ள ரஷ்ய கப்பல்களிலிருந்துதான் எண்ணெய்யை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், ஏப்.4 வரை இந்த அனுமதி இருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்த விஷயத்தில் உஷாரான ரஷ்யா, நாங்கள் எவ்வளவு எண்ணெய் விநியோகிக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டோம் என்று கூறிவிட்டது. இதன் காரணமாக, ரஷ்யா-இந்தியா இடையே எவ்வளவு எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது என்பது இரு நாடுகளை தவிர யாருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+