பெரும் பதற்றம்! ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்.. மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்து என்ன
வாஷிங்டன்: மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அமெரிக்கா அங்கே நடத்தியுள்ள தாக்குதல் ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில காலமாகவே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக இஸ்ரேல் ஹமாஸ் போருக்குப் பிறகு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த போர் அந்த பிராந்தியத்தில் இருந்த அமைதியை முற்றிலுமாக சீர் குலைத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்த போர் பிராந்திய போராக மாறிவிடக் கூடாது என்பதே அனைத்து நாடுகளின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், களத்தில் அதற்கு நேர்மாறான நிகழ்வுகளே நடக்கிறது.
ஹிஸ்புல்லா: ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினர் அங்குள்ள அண்டை நாடுகள் மீதும் அமெரிக்கப் படைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் படை மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் எங்கு அங்குப் பிராந்திய மோதல் வெடிக்குமோ என்பதைப் பலரது அச்சமாக இருக்கிறது.
இதற்கிடையே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதாவது ஈராக் பகுதியில் அமெரிக்க ராணுவம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் ஆதரவு படைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. அதில் 3 அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
அமெரிக்கா தாக்குதல்: ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் படைகள் மீது அமெரிக்கப் படைகள் இப்போது தாக்குதல் நடத்தி இருக்கிறது, இந்த தாக்குதல் தேவையான ஒன்று என்றும் அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இன்று அமெரிக்க அதிபரின் வழிகாட்டுதலின்படி, அமெரிக்க ராணுவப் படைகள் ஈராக்கில் உள்ள கட்டாய்ப் ஹிஸ்புல்லா மற்றும் அதன் மற்ற குழுக்கள் பயன்படுத்தும் 3 தளங்களில் தேவையான மற்றும் பதிலடி தாக்குதல்களை நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளோம்.
ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்பு அமெரிக்கப் படைகள் இருக்கும் எர்பில் விமான தளத்தில் தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவரது உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. அவர்கள் விரைவாகக் குணமடைய வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.
தயங்க மாட்டோம்: அதிபர் பைடன் அமெரிக்காவைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயங்கமாட்டார். நான் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கா, எங்கள் வீரர்கள். எங்கள் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க அதிபரும் நானும் ஒருபோதும் தயங்க மாட்டோம். இதுதான் எங்களுக்கு முக்கியமானது. அதேநேரம் நாங்கள் இந்த பிராந்தியத்தில் மோதலை அதிகரிக்க நாங்கள் முயலவில்லை.
நாங்கள் எங்கள் வீரர்களையும் எங்கள் ராணுவ தளங்களையும் பாதுகாக்கவே தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். அதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications