அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விபத்து.. கொத்தாக நீரில் விழுந்த கார்கள்.. வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவில் கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார்களும் ஆற்றில் விழுந்தன. ஹாலிவுட் பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலர் ஆற்றில் விழுந்து சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அமரிக்காவின் பல்டிமோர் நகரத்தில் பிரமாண்ட பாலம் ஒன்று உள்ளது. படப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த பாலம் சுமார் 2.6 கிலோ மீட்டர் கொண்டது ஆகும். இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த பாலம் எப்போதும் பிசியாக காணப்படும்.

தினமும் நுற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதும் போவதுமாக இந்த பாலம் 24 மணி நேரமும் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. I--695 என்ற இந்த பாலத்திற்கு கீழே கப்பல்களும் செல்கின்றன. குறிப்பாக சரக்கு கப்பல்கள் அடிக்கடி இந்த ஆற்றில் செல்கின்றன. இந்த நிலையில் தான், அதிகாலை 1.35 மணியளவில் பல்டிமோர் பாலத்தின் மீது சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது.
ஹாலிவுட் பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு: மோதிய வேகத்தில் பாலம் அப்படியே இடிந்து ஆற்றில் விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார்களும் ஆற்றில் விழுந்தன. ஹாலிவுட் பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு பல்டிமோர் நகர போலீசார் விரைந்தனர்.
உடனடியாக பாலம் மூடப்பட்டது. நீரில் விழுந்த கார்களில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பலர் ஆற்றில் விழுந்து சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதும், பாலம் இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இணையத்தில் வெளிவந்த வீடியோ: குறைந்தபட்சம் 7 பேர் வரை ஆற்றில் சிக்கியிருக்க கூடும் என்று பல்டிமோர் நகர போலீசார் கூறினர். நள்ளிரவு 1.30 மணியளவில் எங்களுக்கு எமெர்ஜென்சி அழைப்பு வந்ததாகவும், விபத்து நடைபெற்ற போது பாலத்தில் பல வாகனங்கள் சிக்கி தவித்ததாகவும் கூறினார். சிக்கியுள்ளவர்களை மீட்பதில்தான் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில், பால்டிமோர் நகரில் உள்ள பிரான்ஸ்சிஸ் ஸ்காட் பாலம் இரவு நேரம் மின் விளக்குகளுடன் ஒளிர்கிறது. உயரமான கட்டிடங்களிலும் ஆங்காங்கே மின்னொளியில் மிதக்கின்றன. பாலத்தில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஒளியை பாய்ச்சிய படி சீறி செல்கின்றன. அப்போது கப்பல் பாலம் மீது மோதியதும் பாலம் அப்படியே சினிமா காட்சி போல நீருக்குள் விழுந்து நொறுங்குகிறது.
20 பேர் மூழ்கி இருக்கலாம்: பாலத்துடன் சேர்ந்து அந்த வாகனங்கள் அனைத்தும் நீருக்குள் மூழ்குவதும் காட்சியில் தெரிகிறது. இந்த விபத்தில் ஏறத்தாழ 20 பேர் நீருக்குள் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 300 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
கப்பல் ஊழியர்களுக்கு என்ன ஆனது?: போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றி வருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன. கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற சரக்கு கப்பல் மோதியதை கப்பல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications