லண்டன் டூ அமெரிக்கா.. டன் கணக்கில் தங்கத்தை கொண்டு போகும் வங்கிகள்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
வாஷிங்டன்: லண்டனில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,935 டாலராக உள்ளது. இந்த நிலை நீடித்தால், ஒரு டிராய் அவுன்ஸ் விலை 3,000 டாலர் வரையில் அதிகரிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதனால் தங்கமானது லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு வேன்களில் பாதுகாப்பாக விமான நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது. வணிக விமானங்கள் மூலமாகவும் தங்கங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அது மட்டும் இன்றி ஸ்விஸ் நிறுவனங்கள் வழியாகவும் எடுத்து செல்லப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்து இருக்கிறார். டிரம்பின் இந்த அறிவிப்பில் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சமும் எழுந்துள்ளது.

டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்பு காரணமாக ஏற்கனவே விலையேறிக்கொண்டு இருந்த தங்கம் விலை மேலும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க வங்கி ஒன்று பல பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் இருந்து நியூயார்க் கொண்டு வர வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கின்றது. இதற்கு காரணம், ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் வரிவிதித்து விடக்கூடும் என்ற அச்சமே ஆகும்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு வங்கிகள் இப்படி தங்கத்தை அதிக அளவில் திருப்பி எடுத்து வருவதால் 50 பில்லியன் டாலரில் இருந்து 106 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்பு மிரட்டல் காரணமாக லண்டனில் தங்கம் விலை சுமார் 20 டாலர் குறைந்துள்ளது. தங்கம் மீது வரியை டிரம்ப் விதிக்கலாம் என வர்த்தகர்கள் அச்சப்படுகிறர்கள். இதனால், அமெரிக்காவில் தங்கம் மீதான தேவை அதிகரித்துள்ளது.
ஜேபிமோர்கன் மற்றும் ஹெச்.எஸ்.பி.சி போன்ற மிகப்பெரிய வங்கிகள் குறுகிய நிலைகளில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட அட்லாண்டிக் நாடுகளில் இருந்து நியூயார்க் சிட்டிக்கு தங்கம் கொண்டு வர தொடங்கியுள்ளன. நியூயார்க் சிட்டியில் தற்போது லண்டனை விட தங்கத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்க வங்கிகளில் இந்த நடவடிக்கையால் தற்போது லண்டனில் தங்கத்திற்கு கணிசமான அளவு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.
இதனால், தங்கத்தின் டெலிவரி காலம் 4-8 வாரங்களாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்கள் மீது டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்தார். தங்கத்தின் மீதும் வரி விதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளதால் தங்கத்தை முன்கூட்டியே எடுத்து வரும் நடவடிக்கையாக வங்கிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
லண்டனில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,935 டாலராக உள்ளது. இந்த நிலை நீடித்தால், ஒரு டிராய் அவுன்ஸ் விலை 3,000 டாலர் வரையில் அதிகரிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதன் காரணமாக 8 தங்க கட்டிகள், அதாவது இங்கிலாந்து வங்கியின் மொத்த தங்க இருப்பில் சுமார் 2 சதவிகித அதன் பெட்டகங்களிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.
லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு வேன்களில் பாதுகாப்பாக விமான நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது. வணிக விமானங்கள் மூலமாகவும் தங்கங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அது மட்டும் இன்றி ஸ்விஸ் நிறுவனங்கள் வழியாகவும் எடுத்து செல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications