கெட்ட பையன் சார் இந்த எலான் மஸ்க்..! ட்விட்டரை முழுமையாக கைப்பற்ற திட்டம்! இறுதிகட்ட பேச்சுவார்த்தை
வாஷிங்டன் : பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை அமெரிக்கா தொழிலதிபரான எலான் மஸ்க் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அது தொடர்பாக இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பேஸ் எக்ஸ், டெல்ஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவன தலைவரும், தற்போதைய நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தனது பார்வையை உலக அளவில் பிரபல சமூக வலைதலமான ட்விட்டரின் பக்கம் திருப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை எனவும், தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

எலான் மஸ்க் அதிரடி
இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார் . சுமார் 73.5 மில்லியன் ட்விட்டர் பங்குகளை வாங்கியதாக தெரிவித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையால் எலான் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாறியுள்ளார். ஆனாலும் விடாமல் ட்விட்டரை முழுமையாக கைப்பற்றப்போவதாகவும் கூறி ஆஃபரையும் வழங்கினார். ட்விட்டரை $43 பில்லியனுக்கு வாங்குவதாகவும் கூறினார்.

வசமாகும் ட்விட்டர்
இந்நிலையில் ட்விட்டரை $43 பில்லியனுக்கு கையகப்படுத்தும் முயற்சிக்கு பிறகு ட்விட்டர் நிறுவனம் அதனை விற்க எலான் மஸ்க்கிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நேற்றிலிருந்து ட்விட்டர் நிறுவன தலைமை அதிகாரிகள் எலான் மஸ்க்கின் சலுகையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியதாகவும், இந்த வார தொடக்கத்தில் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முட்டுக்கட்டை நீங்கியது
ப்ளூம்பெர்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்பனை செய்வது பற்றிய இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது என ட்விட்டர் தலைமை அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள தகவல் படி, எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் ஆகிய இரு தரப்பினரிடையேயான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், இதனால் எனால் மஸ்க் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எழுந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

விஷ மாத்திரை உத்தி
ட்விட்டர் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு தயாராக இருந்தாலும், எலான் மஸ்க் அளித்துள்ள சலுகை ட்விட்டரை கவரவில்லை என்றே கூறப்படுகிறது. . கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க் அளித்த 43 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தும் திட்டத்தை ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் "விஷ மாத்திரை உத்தி" என்று அழைத்தது குறிப்பிடதக்கது












Click it and Unblock the Notifications