"அழிவின் ஆரம்பம்?" ஒரு பக்கம் 127 பாரன்ஹீட் வெப்பம்! மறுபுறம் கொட்டும் கனமழை! என்ன தான் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தீவிரமான வானிலை என்பது உலகின் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி ஏற்பட ஆரம்பித்துள்ள நிலையில், வெப்பம் இப்போது புதிய உச்சத்தையே தொட்டுள்ளது.

ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எனப் பல பகுதிகளில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. பூமியின் வெப்பம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது ஆபத்தான உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது.

 US, China need to step up as extreme weather are becoming more frequent

அமெரிக்காவைப் பொருத்தவரை மேற்கு மற்றும் தெற்கில் வரலாறு காணாத வெப்பம் சுட்டெரிக்கிறது.. வடகிழக்கு அமெரிக்காவில் அதீத கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மத்திய மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீ புகையால் மூச்சுத் திணறியது.

உச்சம் தொட்ட வெப்பம்: இப்படி அமெரிக்காவில் குழப்பமான ஒரு வானிலை நிலவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள டெத் வேலி என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வெப்பம் 127 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. கடந்த 90 ஆண்டுகளாகப் பதிவான வெப்பத்தில் இதுதான் உச்சமாகும். அதுபோல ஃபீனிக்ஸ் என்ற மற்றொரு பகுதியில் கடந்த 18 நாட்களாக 110 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது.

அதேநேரம் இப்படியான கொதிக்கும் வானிலை அமெரிக்காவில் மட்டும் நிலவுகிறது என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது. சீனாவிலும் வடமேற்கில் உள்ள தொலைதூர நகரமான சான்பாவோ 125.9 டிகிரி பாரன்ஹீடி வெப்பம் பதிவாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை அங்கே ஒரு பக்கம் காட்டுத்தீ பொதுமக்கள் கடுமையாகப் பாதித்துள்ளது.

அங்கே பல இடங்களில் வெப்பம் 118 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றுள்ள நிலையில், இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வெப்பம் பாதிப்பு தொடர்பான எச்சரிக்கைகளும் விடப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு நாடுகளிலும் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அதீத வெப்பம் மட்டுமின்றி மழை பெய்தாலும் அது கொட்டி தீர்க்கும் கனமழையாகவே இருக்கிறது. தென்கொரியாவில் கொட்டிய கனமழையால் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா: இந்தியாவிலும் கூட இப்படியான வானிலையைப் பார்க்கலாம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 2ஆவது வாரம் வரையிலும் கூட வெப்பம் உச்சத்தில் இருந்தது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்ப அலை வீசியது. சில இடங்களில் வெப்பம் சார்ந்த மரணங்களும் கூட ஏற்பட்டது. அந்தளவுக்கு வெப்பம் மோசமான நிலையை எட்டியது.

ஆனால், இப்போது பார்த்தால் அதை வட இந்தியாவில் பல இடங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. அதீத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், மண் சரிவு என்று நிலைமை ரொம்பவே மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு முறையும் வானிலை கணிக்கவே முடியாத அளவுக்குத் தீவிரமானதாக மாறி வருகிறது.

என்ன செய்யலாம்: பருவநிலை மாற்றத்திற்கு நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இந்த தீவிரமான வானிலை இனிமேல் அடிக்கடி ஏற்படும் என்று வல்லுநர்கள் அலர்ட் கொடுத்துள்ளனர். இதனால் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா காலநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் சார்ந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த பூமியின் வெப்பத்தைக் காட்டிலும் 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கை தற்போதைய சூழலில் நம்மால் எட்ட முடியாது என்றே தெரிகிறது.. அமெரிக்காவும் சீனாவும் இணைந்தால் மட்டுமே இதற்கான முயற்சியை எடுக்க முடியும் என்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் உலக நாடுகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.. இல்லையென்றால் இதின் அழிவின் ஆரம்பமாக இருக்கும் என்று வல்லுநர்கள் வார்ன் செய்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+