"என்ன திமிர்.." போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவி! நக்கலடித்து சிரித்த அமெரிக்க காவலர்! ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆந்திர மாணவி விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து குறித்து அமெரிக்க போலீசார் ஜோக் அடித்துச் சிரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் பழக்கம் சமீப ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அப்படிச் செல்வோர் அதிகம் செல்லும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று படிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

விபத்து: அதன்படி அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவி தான் ஜாஹ்னவி கந்துலா.. ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், சியாட்டிலில் படித்து வந்தார். இவர் சாலையைக் கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த போலீஸ் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து புதிய வீடியோவை சியாட்டில் போலீசார் வெளியிட்டுள்ளது.
அதில் விபத்து குறித்து அமெரிக்க போலீசார் ஜாலியாக பேசி சிரிக்கிறார். விபத்தில் ஒரு உயிர் பறிபோய் உள்ள நிலையில், அது குறித்து துளியும் கவலை இல்லாமல் போலீசார் இப்படிச் சிரித்துப் பேசும் வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இது விவகாரம் குறித்து இந்தியத் துணைத் தூதரகம் அமெரிக்க அரசிடம் கேள்வி எழுப்பியது.
நக்கல் சிரிப்பு: ஜாஹ்னவி கந்துலாவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீதும், இந்த மரணத்தைக் கேலி செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்றும் இந்தியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்துப் பேசிய அதிகாரி டேனியல் ஆடரர் இந்த விபத்து குறித்துப் பேசும் போது நக்கலாக சிரிக்கிறார். மேலும், விபத்தை ஏற்படுத்திய சக போலீஸ் அதிகாரியான கெவின் டேவ் மீது கிரிமனல் விசாரணை எல்லாம் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இந்த வீடியோ தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரியின் இந்த அலட்சியமான மற்றும் ஆணவமான கருத்துக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக அங்குள்ள இந்திய அமெரிக்கர்கள் இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட போலீசாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மதிப்பு இல்லையா: இது குறித்து இந்திய அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ரோ கன்னா கூறுகையில், "ஜாஹ்னவி கந்துலா இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பட்டம் படிக்க வந்துள்ளார். அவர் இங்கே வேகமாக வந்த போலீஸ் கார் மோதி கொல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்துப் பேசும் அதிகாரி ஆடரர் அந்த பெண்ணின் உயிருக்குப் பெரிதாக மதிப்பு இல்லை என்கிறார். அவரது கருத்தை ஏற்க முடியாது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனைவருக்கும் எல்லையற்ற மதிப்பு இருக்கிறது. எந்தவொரு மனிதரின் உயிரிக்கும் மதிப்பு இல்லை என நினைப்போர் போலீஸ் துறையில் பணியாற்றக் கூடாது" என்றார்.
கடிதம்: எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், கந்துலா குடும்பத்திற்கு சியாட்டில் நகர மேயர் புரூஸ் ஹாரெல் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார். ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்கள் நகரத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஜாஹ்னவியின் மரணம் எங்கள் முழு சமூகத்திற்கும் ஒரு இழப்பு என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரகமும் இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications