கொரோனா நிவாரண நிதி மசோதாவை அம்போவென விட்டுவிட்டு ஹாயாக கோல்ப் விளையாடும் டொனால்ட் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா நிவாரண நிதி மசோதாவை அந்தரத்தில் விட்டுவிட்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை கோல்ப் விளையாடி கொண்டாடி வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பிடனின் வெற்றியை ஏற்க முடியாமல் எத்தனையோ சட்ட போராட்டங்களை டிரம்ப் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

US Coronavirus relief bill hangs in balance; Donald Trumps plays golf

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜோ பிடன், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்கிறார். ஜோ பிடனின் நிர்வாக குழுக்கள் அறிவிக்கப்பட்டும் வருகின்றன.

இதனிடையே டொனால்ட் டிரம்ப் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் ராணுவ நிதி மசோதாவில் கையெழுத்திட மறுத்தார். முன்னதாக கொரோனா நிவாரண நிதி மசோதாவிலும் டிரம்ப் கையெழுத்திட மறுத்தார்.

உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக அமெரிக்கா பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்து வருகிறது. தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இதனால் டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த பின்னணியில் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடி வருகிறார் டொனால்ட் டிரம். ப்ளோரிடாவில் குடும்பத்துடன் கோல்ப் விளையாடி பொழுதை போக்கி வரும் டிரம்ப்பின் செயல் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+