SEC வழக்கு.. அதானி குழுமத்துடன் முன் ஆலோசனை கூட்டத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி
வாஷிங்டன்: "SEC v அதானி" வழக்கில் ஒரு முன் ஆலோசனை கூட்டத்திற்கு (pre-motion conference) அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இது, அதானி குழும நிறுவனங்கள் மீதான அமெரிக்க ஒழுங்குமுறை விசாரணையில் ஒரு முக்கிய நடைமுறையாக அமைந்துள்ளது.

அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தை ஆணையம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கவுதம் அதானியும், அவரது மருமகன் சாகர் அதானியும் அமெரிக்க நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி நிக்கோலஸ் ஜி. கரோஃபீஸ் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம், அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் முன் ஆலோசனை கூட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, எதிர் மனுதாரர்கள் தங்கள் புகாரை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவுக்கு முன் இந்தக் கூட்டத்திற்கு அனுமதி கோரினர். நீதிமன்றம் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கூட்டத்தை ஏற்பாடு செய்ய இரு தரப்பினரும் கலந்தாலோசிக்க அறிவுறுத்தியது. இந்த முன் ஆலோசனை கூட்டத்தின் நோக்கம், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை விவாதிப்பதும், முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே உள்ள சிக்கல்களைத் தீர்த்து, செயல்முறையை இயல்பாக்குவதாகும்.
கூட்டத்திற்கான தேதியை முடிவு செய்ய, நீதிமன்ற துணை அதிகாரியுடன் ஒருங்கிணைக்குமாறு இரு தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை SEC தாக்கல் செய்த புகாரின் செல்லுபடியை அல்லது போதுமான தன்மையை எதிர் மனுதாரர்கள் சவால் செய்யத் தயாராகி வருவதைக் குறிக்கிறது. வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டால், அது விசாரணைக்கு செல்வதற்கு முன்பே வழக்கையோ அல்லது அதன் பாகங்களையோ முடிவுக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளது.
அதானி குழுமம்உலகளாவிய வணிக நலன்கள் மற்றும் அமெரிக்கச் சந்தைகளில் இயங்கும் சர்வதேச நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை ஆய்வுகளின் தாக்கம் காரணமாக, இந்த வழக்கு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. முன் ஆலோசனை கூட்டத்தின் தேதி மற்றும் அதன் முடிவு குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications