Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செய்யாத குற்றத்திற்காக 40 ஆண்டு சிறை.. அமெரிக்காவில் இந்தியருக்கு நேர்ந்த கொடுமை! நெஞ்சு பதறுதே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செய்யாத குற்றத்திற்காக 40+ ஆண்டுகள் சிறையில் வாடிய இந்தியரான சுப்ரமணியம் வேதம் என்பவர் சமீபத்தில் தான் அமெரிக்காவில் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், விடுதலையான உடனேயே அவரை நாடு கடத்த அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், சுப்ரமணியத்திற்கு ஆதரவாக அந்நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

டிரம்ப் வந்த பிறகு அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் ஓவர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சிறு சிறு தவறுகளுக்குக் கூட நாடுகடத்துகிறார்கள். ஆனால், இப்போது அதை விட ஒருபடி மேலாகச் சென்று 40 ஆண்டுகள் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் இருந்த இந்தியரை நாடு கடத்த முயன்றுள்ளனர்.

US Courts Halt Deportation of Indian-Origin Subramanyam Vedam Wrongfully Imprisoned for 43 Years

அமெரிக்க நீதிமன்றங்கள்

அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்பவரை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. கொலைக் குற்றச்சாட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சுப்ரமணியம் வேதம் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தான் சுப்ரமணியம் வேதம் தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

64 வயதான சுப்ரமணியம் வேதம், இப்போது லூசியானாவில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர் எப்போது வேண்டுமானாலும் நாடுகடத்தப்படலாம் என சொல்லப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் தான் அமெரிக்கக் குடியேற்ற நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தது. அதே நாளில் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றமும் சுப்ரமணியத்தை நாடு கடத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது.

பின்னணி

வெறும் 9 மாத குழந்தையாக இருந்தபோது சுப்ரமணியத்தின் பெற்றோர் அவரை அமெரிக்காவுக்கு அழைத்து வந்தனர். அவர் வளர்ந்தது எல்லாமே அங்கு தான். இந்தச் சூழலில் தான் 1980இல் தனது நண்பர் தாமஸ் கின்சர் என்பவரைக் கொன்றதாகச் சொல்லி அந்நாட்டு போலீசார் சுப்ரமணியத்தை 1982இல் கைது செய்தனர். அப்போது கினசருக்கு வயது 19.. அவர் 1980 டிசம்பரில் காணாமல் போன நிலையில், சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை

கின்சரை கடைசியாக உயிருடன் பார்த்தவர் சுப்ரமணியம் தான். அதைக் காரணமாக வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது நிரந்தரக் குடியுரிமை பெற்றிருந்த வேதம் சிறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் குற்றச்சாட்டுகளும் அவர் மீது இருந்தது. சுப்ரமணியம் மீது வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் தான் குற்றவாளி என்று 1983ல் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் குற்றத்திற்காக அவருக்குக் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.

சுப்ரமணியம் தான் குற்றவாளி என்பதற்கு எந்தவொரு சாட்சிகளும் அப்போது இல்லை. தெளிவான ஆதாரங்களும் இல்லை.. மேலும், கின்சரை எதற்காக சுப்ரமணியம் கொன்றார் என்ற நோக்கத்தையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை. கின்சருடன் கடைசியாக இருந்தார் என்பதை அடிப்படையாக வைத்து சில சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் அடிப்படையாக வைத்தே போலீசார் கைது செய்திருந்தனர்.

43 ஆண்டுகள் சிறை

இருப்பினும், அவர் தொடக்கம் முதலே தான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்றே கூறி வந்தார். சுப்ரமணியம் நிரபராதி என்பதை நிரூபிக்க அவரது குடும்பத்தினரும் தீவிர முயற்சிகளை எடுத்தனர்.

பென்சில்வேனியாவில் உள்ள சிறையில் கடந்த 40 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்ட சுப்ரமணியம், அங்கிருந்தபடியே கல்வி கற்க ஆரம்பித்தார். சிறையில் இருந்தபடியே மூன்று பட்டங்களைப் பெற்ற அவர், ஆசிரியரானார்.. மேலும் பல கைதிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். இந்தச் சூழலில் தான் அவரது தந்தை 2009இல் காலமானார், அவரது தாயார் 2016இல் காலமானார்.

விடுவிப்பு

இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்ரமணியத்திற்கு ஒரு வழியாக நியாயம் கிடைத்தது. முதலில் வழக்கு விசாரணை நடந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் துப்பாக்கிச் சூடு ஆதாரங்களை மறைத்துள்ளனர். அதை சுப்ரமணியத்தின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்து மேல்முறையீடு செய்தனர். அதன் அடிப்படையில் பென்சில்வேனியா நீதிமன்றம் அவரது தண்டனையை ரத்து செய்தது.

தொடரும் கொடூரம்

43 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த சுப்ரமணியம் கடந்த அக்டோபர் 3ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவரால் அதிகக் காலம் சுதந்திர காற்றைச் சுவாசிக்க முடியவில்லை.. அவர் விடுவிக்கப்பட்ட உடனே குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சுப்ரமணியம் போதைப்பொருள் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அதைக் காரணமாகச் சொல்லி சுப்ரமணியத்தை நாடு கடத்த விரும்பியது.

கொலை வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், போதைப்பொருள் தண்டனை ரத்து செய்யப்படவில்லை என்பதைக் காரணமாகச் சொன்னார்கள். இதன் காரணமாகவே அவரை கைது செய்து நாடு கடத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர். இந்தச் சூழலில் தான் அதற்கு அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+