இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல்? பாக் போர் ஜெட்களை நவீனப்படுத்த அமெரிக்கா "பிளான்"- என்ன நடக்குது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு தாங்கள் ஏற்கனவே வழங்கிய சக்திவாய்ந்த எஃப் 16 போர் விமானங்களை மேலும் மேம்படுத்த, 450 மில்லியன் டாலர் மதிப்பிலான தளவாடக் கருவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீவிரவாதத்தை காரணம் காட்டி பாகிஸ்தானிடம் பாரா முகம் காட்டி வந்த அமெரிக்கா, திடீரென அந்நாட்டிடம் நெருக்கம் காட்டுவது சர்வதேச அரசியல் நோக்கர்களை உற்று நோக்க செய்துள்ளது. ரஷ்யாவுடன் இந்தியா இணக்கமான உறவை பேணி வருவது பிடிக்காமல் கூட, அமெரிக்கா இதுபோன்ற எதிர் அரசியலை கையில் எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் இந்தப் போக்கு தொடர்ந்தால் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வந்த அனைத்து வெளிநாட்டுக் கொள்கைகளும் மாறும் எனக் கூறப்படுகிறது.

இந்திய - அமெரிக்க உறவு எப்படிப்பட்டது?

இந்திய - அமெரிக்க உறவு எப்படிப்பட்டது?

இந்தியாவுடன் அமெரிக்கா பேணி வரும் நெருக்கமான உறவு பழங்காலத்தில் இருந்து தொடங்கியது கிடையாது. சுதந்திரம் அடைந்தது முதலாக, இந்தியாவுடன் அமெரிக்கா உறவு கொண்டிருந்தாலும் அது நட்புறவாக இருந்தது கிடையாது. மாறாக, அது அதிகாரம் செய்யும் தொனியிலேயே இந்தியாவுடனான உறவை அமெரிக்கா பேணி வந்தது. அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் எந்த பெரிய முடிவயைும் இந்தியாவால் தன்னிச்சையாக எடுக்க முடியாது என்ற சூழலே அப்போது இருந்து வந்தது.

அணுசக்தியாக மாறியதால் நட்புறவு

அணுசக்தியாக மாறியதால் நட்புறவு

இதுபோன்ற சூழலில்தான், இந்தியா அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இது தெரியவந்ததும் அமெரிக்கா அதற்கு பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டை போட்டது. கடும் எதிர்ப்பையும் தெரிவித்தது. ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி 1974-இல் இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியது. அதன் பின்னர் 1998-இல் போக்ரான் அணுகுண்டு சோதனையிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என உணர்ந்த அமெரிக்கா இந்தியாவுடன் நட்பு பாராட்ட தொடங்கியது.

அமெரிக்காவை கோபப்படுத்திய இந்தியா

அமெரிக்காவை கோபப்படுத்திய இந்தியா

அமெரிக்காவுடன் நட்புறவை பேணி வந்தாலும், ஒருபோதும் அதன் கட்டுப்பாட்டுக்குள் செல்வதை இந்தியா தவிர்த்து வந்தது. குறிப்பாக, அமெரிக்காவுடன் நட்பு வேண்டுமானால் ரஷ்யாவுடன் உறவு வைக்கக் கூடாது என்ற எழுதி வைக்கப்படாத சட்டம் சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த விதியை துணிச்சலாக புறந்தள்ளிவிட்டு, ரஷ்யாவுடன் ஆழமான நட்புறவை இந்தியா பேணி வருகிறது. அதற்கு பிரதிபலனாக ரஷ்யாவும் இந்தியாவுக்கு ராணுவ ரீதியிலான உதவிகளை செய்து வருகிறது. இப்போது வரை, இந்திய ராணுவத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பங்கு தளவாடங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது தான். இந்த உறவு அமெரிக்காவுக்கு பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி இந்தியாவுடன் அமெரிக்கா நட்புறவை பேணி வருகிறது. ஏன் தெரியுமா? ஆசிய கண்டத்தில் சீனாவின் வளர்ச்சி அதிகமானால் அது தனக்கு ஆபத்தாகிவிடும் என்பதால் அதை தடுப்பதற்கு இந்தியாவுடன் நட்புறவை கொண்டிருக்கிறது அமெரிக்கா.

 மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா

மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா

இதுபோன்ற நிலையில் தான், உலகிலேயே மிகவும் வல்லமை வாய்ந்த எஸ் 400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுவரை நடந்ததை எல்லாம் வேண்டா வேறுப்பாக வேடிக்கை பார்த்து வந்த அமெரிக்கா, எஸ் 400 ஏவுகணைகளை இந்தியா வாங்கக் கூடாது என பகிரங்கமாகவே தெரிவித்தது. அப்படி வாங்கினால் அது இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும் என அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா அடிபணியவில்லை. இந்தியாவின் வெளியறவுக் கொள்கை சுதந்திரமானது. வேறு எந்த நாடுகளும் இதில் தலையிட முடியாது என வெளிப்படையாகவே மத்திய அரசு அறிவித்தது. அதுபோலவே எஸ் 400 ஏவுகணைகளை வாங்கும் பணிகளிலும் இந்தியா ஈடுபட்டது. இது அமெரிக்காவுக்கு இந்தியாவின் மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்தியா உடனான நட்புறவை பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் கூறும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றது. ஆனால் இந்தியா இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அமெரிக்காவுக்கு தர்மசங்கடம்

அமெரிக்காவுக்கு தர்மசங்கடம்

நிலவரம் இப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது தான், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்து. இந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் வழக்கம் போலவே ரஷ்யாவுக்கு ஆதரவாகவே இந்தியா இருந்தது. உக்ரைன் போரை விமர்சித்தாலும் ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச தளங்களில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களை இந்தியா ஆதரிக்கவில்லை. மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையைும் மீறி ரஷ்யாவிடம் எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களையும் இந்தியா வாங்கி வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு சர்வதேச அளவில் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானுடன் நெருக்கம்

பாகிஸ்தானுடன் நெருக்கம்

இதுபோன்ற பின்னணியில் தான், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சமீபகாலமாக அதிக அளவில் நெருக்கம் காட்டி வருகிறது. தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது பல ஆண்டுகளாக அமெரிக்கா பாரா முகம் காட்டி வந்தது. மேலும், அந்நாட்டுக்கு வழங்கி வந்த நிதியுதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியது. ஆனால், உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்காவின் நிலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. பாகிஸ்தானுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிதியுதவிகளை அமெரிக்கா விடுவித்தது. மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் ஆகியோரும் அமெரிக்காவுக்கு சென்று வருவது அதிகரித்தது.

 பாகிஸ்தானுக்கு உதவி

பாகிஸ்தானுக்கு உதவி

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தாங்கள் ஏற்கனவே வழங்கி இருக்கும் எஃப் 16 போர் விமானங்களை கூடுதலாக மேம்படுத்த 450 மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ. 3,500 கோடி மதிப்பிலான கருவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானில் இருக்கும் எஃப் 16 போர் விமானங்கள் மேலும் வலிமையானதாக மாறும். அந்த போர் விமானங்களில் அதநவீன ரேடார்களை பொருத்துவது, சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசும் அமைப்புகளை உருவாக்குவது போன்ற மாறுதல்களை செய்ய அமெரிக்கா இந்த தளவாட கருவிகளை வழங்குகிறது.

எச்சரிக்கை விடுக்கும் முன்னாள் தூதர்

எச்சரிக்கை விடுக்கும் முன்னாள் தூதர்

அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கை இந்தியாவை மிகுந்த கவலை அடையச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜி. பார்த்தசாரதி கூறியதாவது:

அமெரிக்கா செய்யும் இந்த உதவியின் மூலம் பாகிஸ்தானின் போர்த் திறன் பல மடங்கு அதிகரிக்கும். இதன் எதிர்விளைவுகளை இந்தியா தான் சந்திக்க வேண்டி இருக்கும். இதன் மூலம் இந்தியாவுக்கு நிகரான ராணுவ வலிமை பெற்ற நாடாக பாகிஸ்தானை மாற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இந்த விவகாரத்தில் தனது கவலையை அமெரிக்காவிடம் இந்தியா தெரிவிக்க வேண்டும். இது புறக்கணிக்கத்தக்க விஷயம் அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+