சொத்து மதிப்பில் தில்லாலங்கடி! வசமாக சிக்கிய டிரம்ப்.. ரூ.3000 கோடி அபராதம் விதித்த அமெரிக்க கோர்ட்
வாஷிங்டன்: சொத்து மதிப்பை உயர்த்தி காட்டி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு 3 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வரும் டிரம்புக்கு நீதிமன்ற தீர்ப்பு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் டிரம்பிற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் நிலுவையிலும் உள்ளன. எனினும் இதற்கெல்லாம் சளைக்காத டொனால்டு டிரம்ப், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்.

குடியரசுக்கட்சி சார்பில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள டொனால்டு டிரம்ப் அதற்கான பணிகளை தொடங்கி முழு வீச்சில் சென்று கொண்டு இருக்கிறார். இதற்கிடையே, டொனால்டு டிரம்ப் சொத்து மதிப்பை உயர்த்தி காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 3 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
அமெரிக்கவில் உள்ள நியூயார்க் கார்பரேசன் நிறுவனத்தின் இயக்குனராக டொனால்டு டிரம்ப் உள்ளார். தனது தொழிலில் முதலீடு செய்ய வங்கியிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அவர் வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் தனது சொத்து மதிப்புகளை உயர்த்தி காட்டி மோசடி செய்து இருப்பதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், டிரம்ப் மோசடி செய்தது நிரூபணம் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு 364 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி) அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கும் தலா ரூ.33 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் டொனால்டு டிரம்ப், மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளருக்கான போட்டியிடும் ரேசில் குடியரசுக்கட்சியில் முன்னணியில் இருக்கும் டிரம்புக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications