அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை இல்லை.. நம்மகிட்ட மட்டும்தான் வாய்! டிரம்பின் டபுள் கேம்!
வாஷிங்டன்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏழாம் பொருத்தம் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், இந்த நினைப்பில் குண்டை தூக்கி போட்டிருக்கிறார் டிரம்ப்! ஆம் மக்களே, சீனாவின் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவை மொத்தமாக புறக்கணியுங்கள் என்று கூறி வந்த டிரம்ப், தற்போது டிக்டாக் செயலிக்கு தடையை நீக்கியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க அரசு என்னதான் சீனாவுக்கு எதிராக இருந்தாலும், அந்நாட்டு மக்கள் டிக்டாக்கின் பயங்கர ரசிகர்களாக இருக்கின்றனர். எனவே இந்த செயலியை முழுமையாக செயல்படுத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என்று உணர்ந்த அமெரிக்கா, தங்கள் நாட்டில் டிக்டாக் இயங்க வேண்டும் எனில், அதன் அமெரிக்கா கிளையை, முழுமையாக அமெரிக்கர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சீனர்கள் இதற்கு உரிமை கோர முடியாது என்று கூறியிருந்தது. இப்படி அமெரிக்கர்கள் கையில் ஒப்படைப்பதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. இன்றுடன் இந்த காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து இயங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.
அமெரிக்கர்கள் வசம் டிக்டாக் ஒப்படைப்பது குறித்து மாட்ரிட்டில் சமீபத்தில் அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் இடையேயான பேச்சுவார்த்தையை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாட்ரிட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சீனாவை சேர்ந்த டிக்டாக், அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸிடமிருந்து, அமெரிக்காவின் ஓராகிள், ஆண்ட்ரீசன் ஹொரோவிட்ஸ் மற்றும் சில்வர் லேக் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நிறுவனத்திற்கு மாற்றப்படும்.
இந்தத் தற்காலிக ஒப்பந்தத்தின் கீழ், பைட் டான்ஸின் டிக் டாக் பங்குகள் 20 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும். ஒருவேளை இது மீறப்படும்பட்சத்தில் டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படும். ஒப்பந்தத்தை அமல்படுத்த காலக்கெடுவாக டிசம்பர் மாதம் 16ம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரின் இறுதி ஒப்புதலும் விரைவில் வெளியாகலாம்.
என்னதான் அமெரிக்க நிறுவனம், அந்நாட்டில் இயங்கும் டிக்டாக் பிரிவின் 80% பங்குகளை கொண்டிருந்தாலும், டிக்டாக்கின் அல்காரிதத்தை முழுமையாக அந்நிறுவனம் நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. இதுதான் டிக்டாக் விஷயத்தில் மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்குள் இயங்கும் டிக்டாக்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அந்நாடு விரும்புகிறது. ஆனால் அதற்காக எங்கள் நிறுவனத்தின் அல்காரிதத்தை கொடுக்க மாட்டோம். வேண்டும் எனில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தருகிறோம் என்று சீனா கூறியுள்ளது.
ஆனால் முழுமையாக எங்களிடம் அல்காரிதத்தை கொடுத்துவிட வேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது. ஏனெனில் தங்கள் நாட்டை சேர்ந்த சுமார் 17 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. இவர்களின் தகவல்கள் திருடப்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? என்றும் கேட்கிறது.
ஆக இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் டிசம்பர் மாதம் 16ம் தேதிக்குள் தீர்வு எட்டப்படலாம். எப்படி இருப்பினும் தற்போதைக்கு அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்க தடை விதிக்கப்படவில்லை. இது அமெரிக்கா-சீனா உறவின் புதிய பயணத்தை தெளிவுப்படுத்துவதாக இருக்கிறது.
சீனாவையும் ரஷ்யாவையும் காரணம் காட்டி இந்தியா மீது அதிக வரியை போடும் டிரம்ப் இன்று வரை, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளையும், சீனாவிடமிருந்து கனிம வளங்களையும் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார். இப்போது டிக்டாக்கும் அமெரிக்காவின் கொள்முதல் வரியைில் இணைந்திருக்கிறது. அப்படியெனில் இந்தியாவிடம் எதற்கு வாய்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications