நள்ளிரவு முதல் முடங்கும் அமெரிக்கா.. எதுவுமே இயங்காதாம்! அடுத்து என்ன நடக்கும்! 10 பாயிண்டுகள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் செலவினங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அமெரிக்க அரசு மொத்தமாக ஷட் டவுன் அதாவது முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதென்ன ஷட் டவுன். இதனால் அமெரிக்காவில் என்னவெல்லாம் பாதிக்கப்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் செலவினங்கள் தொடர்பான மசோதா பிரதிநிதிகள் சபையில் தாக்கலான போதிலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. உடனடியாக அந்நாட்டு நாடாளுமன்றம் எமர்ஜென்சி பிளானை கொண்டு வராவிட்டால் நாளை முதல் அமெரிக்கா அரசு ஷட் டவுன் ஆகும்.

அமெரிக்கா ஷட் டவுன்:
மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்றிரவு வரை மட்டுமே டைம் இருக்கிறது. இல்லையெனில் அங்குள்ள பெடரல் அமைப்புகள் மூடப்படும். அதாவது பல ஆயிரம் அமெரிக்க பெடரல் ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அல்லது ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இது குறித்து 10 முக்கிய பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
- அமெரிக்க பெடரல் அரசுக்குத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிதியுதவி அளிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேறத் தவறும் போது இதுபோல அரசு முடங்கும். இது தானாகவே நடக்கும். அதிபரின் ஒப்புதல் எதுவும் தேவையில்லை..
- அமெரிக்க நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை இரவுக்குள் செலவினங்கள் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் பெடரல் அரசு முடங்கும். கடந்த செப். மாதமே அமெரிக்கா ஷட் டவுன் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தது. அப்போது தற்காலிக தீர்வாக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா நாளையுடன் நிறைவடையும் நிலையில், அமெரிக்க அரசு முடங்கும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா எப்படிப் பாதிக்கப்படும்:
- இதன் காரணமாக சுமார் 8.75 லட்சம் அமெரிக்கர்கள் தற்காலிகமாக பணிநீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். மேலும், சுமார் 14 லட்சம் அத்தியாவசிய துறை ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்.
- அதாவது அமெரிக்க புலனாய்வுத் துறை, எல்லை பாதுகாப்புப் படை, கடலோர காவல்படை போன்ற அத்தியாவசிய அமைப்புகள் தொடர்ந்து செயல்படும். அதேபோல அமெரிக்க போஸ்டல் சர்வீஸ் சுயநிதியில் செயல்படுவதால் அதுவும் இதனால் பாதிக்கப்படாது.
- அதேநேரம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பைத் தரும் சுற்றுலாத் துறை மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்கொள்ளும். ஏனென்றால் தேசிய பூங்காக்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் மூடப்படும்.
- இதனால் நீதித்துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும்.. குற்றவியல் வழக்குகள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்ற போதிலும், சிவில் வழக்கு விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அமெரிக்கா மொத்தமாக முடங்கும் ஆபத்து.. சொந்த கட்சியினரே கைவிட்டதால் டிரம்பிற்கு சிக்கல்! அடுத்து என்ன
சம்பளம் இல்லாமல் வேலை செய்ய நேரிடும்:
- அங்கு விமான பாதுகாப்பை உறுதி செய்யும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அத்தியாவசிய பணியாகக் கருதப்படுவதால் அந்த அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுவார்கள். இருப்பினும், அவர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பதால் பலர் விடுப்பு எடுக்கும் சூழல் இருக்கிறது. இதனால் விமானச் சேவையில் தாமதம் மற்றும் விமான ரத்து அதிகம் ஏற்படும்.
- இதன் காரணமாக பெடரல் அரசு சார்பில் வழங்கப்படும் பல முக்கிய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். இதனால் அரசின் திட்டங்களை நம்பி இருக்கும், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கும்:
- இதற்குத் தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அமெரிக்க நேரப்படி இன்று நள்ளிரவைத் தாண்டியவுடன், அதாவது 12.01 முதல் இது அமலுக்கு வரும். இருப்பினும், அடுத்த இரண்டு நாட்கள் வீக் எண்ட் விடுமுறை பெரிய பிரச்சினை தெரியாது. அதன் பின்னரே ரியல் பாதிப்புகள் புலப்படத் தொடங்கும்.
- இன்று இரவு வரை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு நேரம் இருக்கிறது. அதற்குள் தற்காலிக தீர்வை தரும் மசோதாவை நிறைவேற்றினால் கூட போதும், முடங்கும் ஆபத்தில் இருந்து அமெரிக்கா தப்பிவிடும்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications