"ஒரே மாசம்.." அமெரிக்கா சொன்னது போலவே ரஷ்யாவில் நடந்த கொடூர தாக்குதல்! கோட்டைவிட்ட புதின்! என்னாச்சு
வாஷிங்டன்: ரஷ்யாவில் இசைக் கச்சேரியில் நடந்த மிக மோசமான தாக்குதலில் 60+ பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் இரு முக்கியமான நாடுகள் என்றால் அது அமெரிக்காவும் ரஷ்யாவும் தான். உலகின் டாப் நாடுகளாக இருக்கும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும்.

அதிலும் பனிப்போர் காலகட்டத்தில் மறைமுகமாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் பல ஆண்டுகள் தொடர்ந்தது. இப்போது அந்தளவுக்கு வெளிப்படையாக மோதல் இல்லை என்ற போதிலும் இரு தரப்பும் நேர் எதிரான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து இருக்கும்,.
எச்சரித்த அமெரிக்கா: இதற்கிடையே ரஷ்யாவில் நடந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே எச்சரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அருகே இசைக் கச்சேரி அரங்கில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கண்ணில் பட்ட அனைவரையும் அவர்கள் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி தொடங்கி உலகின் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலில் இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை. உக்ரைன் கூலிப்படை இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் ரஷ்ய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர், அதன் பின்னரே இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.
வெள்ளை மாளிகை: இந்தத் தாக்குதல் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்கோவில் பெரிய நிகழ்ச்சிகளைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இம்மாத மாத தொடக்கத்திலேயே அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்ததாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது..
இருப்பினும், ரஷ்யா சரியான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. இதன் காரணமாகவே அங்கே மோசமான துப்பாக்கிச் சூடு அரங்கேறியுள்ளது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அருகே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
என்ன சொன்னார்: இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறுகையில், "இந்த மாத தொடக்கத்தில் தான் நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம். மாஸ்கோவில் குறிப்பாகப் பெரிய கூட்டங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக நாங்கள் ரஷ்யாவை எச்சரித்தோம். அமெரிக்க அதிகாரிகள் இந்த தகவலை ரஷ்ய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்" என்றார்.
பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு நீண்டகால "duty to warn" என்ற பாலிசியை பின்பற்றி வருகிறது. உலகின் மற்ற நாடுகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்தால் அமெரிக்கா அந்த நாடுகளை எச்சரிக்கும். அமெரிக்காவுக்கு விரிவான உளவு அமைப்பு இருக்கும் நிலையில், அவர்களிடம் இருந்து பெறும் தகவல்களை உரிய நேரத்தில் அமெரிக்கா எச்சரிக்கும். அதன்படியே அவர்கள் ரஷ்யாவை எச்சரித்துள்ளார்கள். ரஷ்யா உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால் மோசமான தாக்குதல் அரங்கேறி உள்ளது.
-
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications