பூஜ்ஜிய வரியில்.. இந்திய சந்தையில் நுழையும் அமெரிக்க வேளாண் பொருட்கள்! உறுதி செய்தது வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து வேளாண் பொருட்கள் இந்திய சந்தைக்குள் நுழைய உள்ளன. இப்படி நடந்தால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில், பூஜ்ஜிய வரியில் இந்திய சந்தையில் அமெரிக்கா வேளாண் பொருட்கள் நுழைவதை வெள்ளை மாளிகை உறுதி செய்திருக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்த செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இது குறித்த விளக்கமான அறிக்கையை தற்போது வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கிறது.

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இந்தியா அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு, குறிப்பாக சிலவற்றிற்கு 37% வரை அதிக வரி விதிக்கிறது. ஆனால், தற்போது போடப்பட்டிருக்கும் இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கத் தொழில்துறைப் பொருட்கள், உலர்ந்த தானியங்கள், தீவனத்திற்கான சிவப்பு சோளம் உட்படப் பல உணவு, விவசாயப் பொருட்களின் வரிகளை நீக்கவோ அல்லது குறைக்கவோ இந்தியா உறுதியளித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உலர் பழங்கள் மற்றும் தானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த இறக்குமதி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம் எழுந்திருக்கிறது. எனவே இந்த ஒப்பந்தத்தை விவசாய சங்கங்கள் எதிர்த்து வந்தன. ஆனால், மத்திய அரசு தரப்பில் விவசாயிகளுக்கு பாதிப்பு இருக்காது என்று சொல்லப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில், அமெரிக்க வேளாண் பொருட்கள் 0 வரியில் இறக்குமதி செய்யப்படுவது மீண்டும் உறுதி செய்யப்டப்பட்டிருக்கிறது.
இதனால் விவசாய சங்கங்கள் போராட்டங்களை மேற்கொள்ளக்கூடும் என்று சொல்லப்படுகிறது. முன்பு இந்தியாதான் அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரியை விதித்திருந்தது. இதனால், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 0 வரி மூலம் இந்திய விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications