மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான்
வாஷிங்டன்: ஈரான் மீது வரலாறு காணாத அளவுக்குக் கொடூரமான ஒரு தாக்குதலை நடத்தப் போவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், சில மணி நேரங்களிலேயே பேச்சுவார்த்தை நல்லபடியாக போகுது.. இதனால் தாக்குதல் எல்லாம் இல்லை எனச் சொல்லி வழக்கம் போல பேக் அடித்துள்ளார். மேலும், போர் நிறுத்த ஒப்பந்தம் சீக்கிரமே கையெழுத்தாகும் என மீண்டும் ஒரு முறை டிரம்ப் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் சூழல் நிலவி வந்தது. குறிப்பாக ஈரான் மீது மிகப் பெரிய மற்றும் கொடூரமான தாக்குதலை இன்றிரவு நடத்தப்போவதாக டிரம்ப் நேரடியாகவே எச்சரித்தார். இது நிலைமையை மோசமாக மாற்றுவதாக இருந்தது. இப்போது இதில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

டிரம்ப் பல்டி
டிரம்ப் வழக்கம் போல பேக் அடித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். இது தொடர்பாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப், "ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், இன்று இரவு ஈரான் மீது நடத்தப்படவிருந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை நான் ரத்து செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என்றும் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
புதிய ஒப்பந்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு பொதுவான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் மட்டுமல்லாமல், இஸ்ரேல், சவுதி அரேபியா, அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளும் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக டிரம்பின் மிரட்டல்களுக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், "தவறான உத்திகளும், அவசரமான முடிவுகளும் நிலைமையை மோசமாக்கும். இது எரிசக்தி சந்தையை அழிப்பதோடு, அமெரிக்காவைப் பல ஆண்டுகள் மீள முடியாத ஒரு புதைகுழியில் தள்ளிவிடும்" என்று அவர் எச்சரித்திருந்தார்.
பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் இப்போது முக்கியமாக இரண்டு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க வேண்டும் என்று ஈரான் கோருகிறது. அந்த நிதியை ஈரான் நேரடியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது ஈரானின் விருப்பம். ஆனால், அமெரிக்காவோ அந்தப் பணத்தை மனிதாபிமானத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், ஈரான் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. மேலும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கவும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதங்களையும் ஈரான் கோரி வருகிறது.
ஈரான்
ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் ரத்து செய்யப்பட்டாலும், ஈரான் மீதான ஹார்முஸில் அமெரிக்கா செய்துள்ள கடல்வழி முற்றுகை தொடரும் என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை இந்த முற்றுகை நீடிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்..
அதேநேரம் இந்த ஒப்பந்தம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வரவில்லை. வளைகுடாவில் தொடரும் இந்த மோதல் தணிவது தான் உலகப் பொருளாதாரத்திற்கும், குறிப்பாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
-
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா!












Click it and Unblock the Notifications