"செக்ஸ் பார்ட்டி.." வெறிபிடித்தது போல மகன் துப்பாக்கி சூடு நடத்தியபோது.. ஹோட்டலில் எல்லை மீறிய தாய்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மகன் துப்பாக்கிச் சூடு நடத்தி 4 பேரைக் கொன்ற வழக்கில் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் துப்பாக்கியை வைத்திருக்கும் உரிமை அனைவருக்கும் கிடைக்காது.. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே துப்பாக்கி பர்மிட்டை தருவார்கள். அதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் இப்படி இல்லை.

அங்கே துப்பாக்கியை வைத்திருக்கப் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் யார் நினைத்தாலும் எளிதாகத் துப்பாக்கியை வாங்க முடியும். இதன் காரணமாகவே அங்கே பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகம்.
துப்பாக்கிச் சூடு: அப்படி தான் அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி ~ஒன்றில் நான்கு மாணவர்களைச் சுட்டுக் கொன்ற டீனேஜ் சிறுவனின் தாயார் மீதும் இப்போது விசாரணை நடந்து வருகிறது. அவரது மைனர் சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நிலையில், 45 வயதான ஜெனிஃபர் க்ரம்ப்ளே மற்றும் அவரது கணவர் 47 வயதான ஜேம்ஸ் க்ரம்ப்ளே ஆகியோர் மீதும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் மகனின் செயலுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவர்களது மகன் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு மாணவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது தொடர்பான வழக்கில் இந்த தம்பதியின் 17 வயது மகன் ஈதன் க்ரம்ப்ளே ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
செக்ஸ் பார்ட்டி: இந்த விசாரணையின் போது தாயார் ஜெனிஃபரின் நீண்டகால நண்பரான பிரையன் மெலோச் சில பகீர் வாக்குமூலங்களை அளித்திருந்தார். அதாவது ஈதன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவர்கள் ஜெனிஃபரும் பிரையனும் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து ஹோட்டல்களில் செக்ஸ் பார்ட்டிகளை நடத்தியுள்ளனர்.
செயலி ஒன்றின் மூலம் முன்பின் அறியாத நபர்களைத் தொடர்பு கொள்வார்களாம்.. வேலை முடிந்த பிறகு ஒரு ஹோட்டலில் மீட்டிங்குகளை ஏற்பாடு செய்து அங்கே செக்ஸ் பார்ட்டிகளை நடத்தியுள்ளனர். இந்த செயலியைப் பயன்படுத்தியதாக ஜெனிஃபர் ஒப்புக்கொண்டார், ஆனால் ஹோட்டல்களுக்கு பிஸ்னஸ் சார்ந்த மீட்டிங்களுக்காகவே சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை: தாயார் ஜெனிபர் தனது மகனுக்குத் தேவையானதைச் செய்யவில்லை. அவர் சின்ன விஷயங்களைச் சரியாகச் செய்திருந்தால் கூட நான்கு மரணங்களை எளிதாகத் தடுத்து இருக்க முடியும் என்று எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தனர். இந்த வழக்கு விசாரணையில் எதிர்தரப்பு வழக்கறிஞர், "தனது மகனுக்கு உளவியல் ரீதியாகப் பிரச்சினை இருக்கிறது என்பது தெரிந்தும் ஜெனிஃபரும் அவரது கணவரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்கள் மகனால் துப்பாக்கியை அணுக முடியும் என்று தெரிந்து இருந்த போதும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் ஜெனிஃபர் துப்பாக்கிச் சூட்டை நேரடியாக நடத்தவில்லை என்ற போதிலும் இந்த மரணங்களுக்கு அவரே பொறுப்பு. அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவங்களை மிக எளிதாகத் தடுத்திருக்க முடியும்" என்ற வாதத்தை முன்வைத்தனர்
-
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம்












Click it and Unblock the Notifications