வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒசாமா பின்லேடன் மகன் எங்கேன்னு சொல்றவங்களுக்கு ரூ. 7 கோடி பரிசு தர்றோம்… அமெரிக்கா அறிவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்:ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பற்றி தகவல் கொடுத்தால் ரூ.7 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று தீவிரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய தாக்குதலை யாரும் எளிதாக மறந்துவிட முடியாது. அந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.

Us offers reward for osama binladens son hamza bin laden

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பின்னால், அவரது மகன் ஹம்சா பின்லேடன் தீவிரவாத குழுக்களின் தலைமை பொறுப்பை ஏற்றார். ஒசாமா பின்லேடனின் மறைவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு எதிராக அனைத்து தீவிரவாத இயக்கங்களும் ஒன்றுகூட வேண்டும் என்று அழைப்பு விடுத்து வந்தார்.

அடுத்த திருப்பம்.. தடை செய்யப்பட்டது பழமையான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம்.. மத்திய அரசு அதிரடி!அடுத்த திருப்பம்.. தடை செய்யப்பட்டது பழமையான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம்.. மத்திய அரசு அதிரடி!

அது தொடர்பாக ஹம்சா பின்லேடன் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டு வந்தார். ஹம்சா பின்லேடனை தேடப்படும் சர்வதேச தீவிரவாதி என 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவராக அவர் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது, ஹம்சாவை பற்றி தகவல் கூறுபவர்களுக்கு ரூ. 7 கோடி வரை சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், ஹம்சா பின்லேடனை தேடும் பணியையும் முழு வீச்சில் அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது.

English summary
US offers reward for Osama's son Hamza Bin Laden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X