டிரம்ப்பிற்கு கூடுதல் பவர்.. இனி ஈரான் விவகாரத்தில் அவர் கண்ணிமைத்தாலே போதும்.. மிக முக்கிய முடிவு
வாஷிங்டன்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே போர் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் ஈரான் போர் விவகாரத்தில் டிரம்பால் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும்.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் நாட்டை கடந்த சனிக்கிழமை தாக்கியது. தாக்குதலின் முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்த மோதல் 6வது நாளாகத் தொடர்கிறது. ஒரு பக்கம் அமெரிக்க- இஸ்ரேல் படைகளின் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பிராந்திய போர்
மற்றொரு பக்கம் ஈரான் படைகளும் இஸ்ரேலை நோக்கி சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்கள் மீதும் ஈரான் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
மசோதா தோல்வி
இதற்கிடையே ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதாவை, அமெரிக்க செனட் சபை புதன்கிழமை நிராகரித்தது. மத்திய கிழக்கில் வேகமாகப் பரவி வரும் இந்த மோதலுக்கு ஒரு தெளிவான முடிவு இதுவரை தெரியவில்லை. அப்படி இருந்தாலும் கூட ஆளும் குடியரசுக் கட்சியினர் முழுக்க முழுக்க டிரம்பிற்கு பின்னால் இருப்பதை இது காட்டுகிறது.
"போர் அதிகாரங்கள் தீர்மானம்" என அறியப்பட்ட இந்த மசோதா, 47-க்கு 53 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நமது நாட்டை போல எம்பிக்கள் அனைவரும் கொறடா உத்தரவைப் பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என்ற விதி அமெரிக்காவில் இல்லை. எம்பிக்கள் தங்கள் விருப்பம் போல வாக்களிக்கலாம். அப்படி இருந்தும் இந்த மசோதா தோல்வி அடைந்துள்ளது, ஆளும் குடியரசு கட்சியினர் முழுக்க முழுக்க டிரம்பிற்கு பின்னால் நிற்பது தெளிவாகிறது.
டிரம்பிற்கு கூடுதல் பவர்
இந்தத் தீர்மானத்தின்படி ஈரான் மோதலை 60 நாட்களுக்கு மேல் தொடர வேண்டும் என்றால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயம். எதிர்காலத் தாக்குதல்களுக்கு முன்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கட்டாயமாக்கும் அதிகாரத்தைச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும். இருப்பினும், அந்த மசோதா தான் இப்போது தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அதிபர் டிரம்பிற்கு கூடுதல் பவர் கிடைக்கிறது. ஈரான் விவகாரத்தில் டிரம்பால் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும்.
அமெரிக்க வெளியுறவுத் துறை
இது ஒரு பக்கம் இருக்கும் சூழலில் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குச் சொந்தமான விமானம் இப்போது மத்திய கிழக்கிற்கு கிளம்பியுள்ளது. மத்திய கிழக்கில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்பதற்காக இந்த விமானம் மத்திய கிழக்கிற்கு சென்றுள்ளது. ஈரானுடனான போர் தீவிரமடைந்ததால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில் தான் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரும் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications