நடுவானில் மயங்கிய விமானிகள்.. Autoland மோடில் தானாக பத்திரமாக தரையிறங்கிய விமானம்.. செம

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: விமான விபத்துகள் குறித்த செய்திகளைப் படிக்கும்போதே பலருக்கும் பயமாக இருக்கும். இதற்கிடையே விமான விபத்துகளைக் குறைக்கும் வகையில் முக்கிய புரட்சிகரமான மாற்றம் நடந்துள்ளது. ஆட்டோலேண்ட் என்ற இந்த அம்சத்தால் பைலட்கள் கட்டுப்பாடு இல்லாமல்.. விமானம் தானாகத் தரையிறங்கியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

பொதுவாக மற்ற போக்குவரத்து முறைகளோடு ஒப்பிடும்போது விமானங்கள் பாதுகாப்பானதாகவே இருந்து வந்துள்ளது. இருப்பினும், விமான விபத்துகள் எப்போதும் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் ஆங்காங்கே ஏற்படும் விபத்துகள் கூட மிகப் பெரியளவில் செய்தியாகும். இதனால் விமானங்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமே முக்கியத்துவம் பெறும்.

flight America offbeat

தரையிறக்கம்

இதற்கிடையே அமெரிக்காவில் திடீரென விமானிகள் மயங்கியதால் Autopilot landing என்ற தானியங்கி முறையில் விமானமே தானாகத் தரையிறங்கியுள்ளது. பைலட்கள் அந்த விமானத்தைத் தொடாத நிலையில், அந்த விமானமே முழுக்க முழுக்க தானாகத் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 'கார்மின் ஆட்டோலேண்ட்' தானியங்கி அமைப்பின் உதவியுடன் அந்தச் சிறிய விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானத்தில் ஏற்பட்ட எமர்ஜென்சியை தொடர்ந்து, பைலட்டுகளின் கட்டுப்பாடு இல்லாமல்.. முழுமையான எமர்ஜென்சி சிஸ்டம் மூலம் விமானம் தரையிறங்கியுள்ளது. அங்குள்ள ராக்கி மவுண்டன் மெட்ரோபொலிடன் விமான நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அங்கு ஆஸ்பனிலிருந்து வழக்கம் போலவே இந்த இரட்டை எஞ்சின் 'பீச்கிராஃப்ட் சூப்பர் கிங் ஏர் 200' விமானம் புறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

உள்ளே பயணிகள் யாரும் இல்லாத நிலையில்.. இரு விமானிகள் மட்டுமே விமானத்தை இயக்கியுள்ளனர். விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அதன் கேபின் அழுத்தம் வேகமாகக் குறைந்துள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் 'ஆட்டோலேண்ட்' தானாகவே செயல்படத் தொடங்கியுள்ளது.

ஆட்டோலேண்ட் என்றால் என்ன

பைலட்டால் விமானத்தை இயக்க முடியாமல் போகும்போது இந்த ஆட்டோலேண்ட் செயல்பட ஆரம்பிக்கும். விமானத்தின் முழு கட்டுப்பாட்டையும் அது எடுத்துக் கொள்ளும். அருகே எந்த விமான நிலையத்தில் தரையிறங்குவது சரியாக இருக்கும் என்பதை ஆட்டோலேண்ட் தானாக முடிவு செய்யும். பிறகு அது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் தானாகத் தொடர்பு கொண்டு, தேவையான தகவல்களைத் தெரிவிக்கும். தரையிறங்க அனுமதி கிடைத்தவுடன் விமானிகளின் தலையீடு இல்லாமல் பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கும்.

இவை அனைத்தையும் சூப்பர் கிங் ஏர் 200 விமானத்தில் இருந்த ஆட்டோலேண்ட் தானாகச் செய்துள்ளது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அவசர ஏர்போர்ட் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். விமானத்தில் பிரஷர் குறைந்ததால் விமானிகள் மயக்கமடைந்ததாக முதலில் தகவல் வெளியானது. இருப்பினும், பிறகு மயக்கமடையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அதேநேரம் ஆட்டோலேண்ட் மூலம் விமானிகளின் தலையீடு இல்லாமலேயே விமானம் தானாகத் தரையிறங்கியுள்ளது.

முதல்முறை

பொருத்தமான விமான நிலையத்தைத் தேர்வு செய்வது, விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பெர்மிஷன் கோருவது விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்குவது என ஆட்டோலேண்ட் தானாகச் செய்துள்ளது. இதுவரை சுமார் 1,700 விமானங்களில் இத்தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சோதனையில் இவை பல ஆயிரம் முறை சோதிக்கப்பட்டாலும் களத்தில் எதிர்பாராத நேரத்தில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இதன் மூலம் ஆட்டோலேண்ட் எந்தளவுக்குப் பாதுகாப்பானது.. இக்கட்டான நேரத்தில் சரியாக கை கொடுத்துள்ளது.

இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் விமானிகளுக்கு உடல்நலக்குறைவு அல்லது பிரஷர் சரிவால் மயக்கம் ஏற்பட்டு விமானத்தைக் கையாள முடியாத சூழல் ஏற்படும்போதும், விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க முடியும்.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+