இஸ்ரேலுக்கு இடியை இறக்கிய டிரம்ப்.. நிதி உதவி நிறுத்தம்! தேர்தல் முடிந்த கையோடு அதிர வைத்த அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற இழுபறி நீடித்து வரக்கூடிய நிலையில், அந்த நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இடியை இறக்கியுள்ளார். ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.39 ஆயிரம் கோடி நிதியை இந்த ஆண்டுடன் நிறுத்த போவதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தியிருப்பதாகவும் டிரம்ப் கூறினார். ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் தொலை, அதாவது இந்திய மதிப்பில் ரூ.33 ஆயிரம் கோடி இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிதி உதவியாக அளித்து வந்தது. தற்போது டிரம்ப் இந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Donald Trump Israel America


நிதி உதவி நிறுத்தம்

ஒருபக்கம் ஈரான் போர் மற்றும் காசா நெருக்கடி என இஸ்ரேலுக்கு நாலாபக்கமும் நெருக்கடிகள் உள்ள நிலையில், அந்த நாட்டிற்கான நிதி உதவி நிறுத்தம் இஸ்ரேலுக்கு நிதி ரீதியாக பெரும் சவாலை ஏற்படுத்தும் என்று சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள். அதேநேரத்தில் இஸ்ரேலுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயத்தை டிரம்ப் அறிவித்து உள்ளார். அது என்னவென்றால், இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்வோம் என்று கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் உதவி செய்வோம் எனவும் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக பாதுகாப்பு ரீதியாக நல்ல உறவு நீடித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு, அத்தகைய உறவில் இருந்து அமெரிக்கா மெல்ல மெல்ல நகர தயாராகி வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தேவைப்பட்டால் உதவி செய்வோம்

அமெரிக்காவின் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு டிரம்ப் பேட்டி அளிக்கையில் நிதி உதவி நிறுத்தம் பற்றி பேசினார். டிரம்ப் கூறும் போது, "இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கி வருகிறோம். ஆனால், இந்த ஆண்டின் இறுதியுடன் அந்த உதவி நிறுத்தப்படும். இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாக வலுவான நாடாக வளர்ந்துள்ளது. எனவே, அந்த நாட்டுக்கு இனி இந்த நிதியுதவி தேவையில்லை. அதேநேரத்தில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது தொடரும். தேவைப்பட்டால் அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்யும்" என்றார்.

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2016 ஆம் ஆண்டு 10 ஆண்டுகளுக்கான ராணுவ உதவி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 2019 முதல் 2028 ஆம் ஆண்டு வரை மொத்தம் 38 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3.3 லட்சம் கோடி) ராணுவ உதவி வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 3.3 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியாகவும், 500 மில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்பு திட்டங்களுக்காகவும் வழங்கப்படுகிறது.

ஒப்பந்தம் முடியும் முன்பே

இந்த ஒப்பந்தம் 2028 ஆம் ஆண்டு வரை அமலில் உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நிதியுதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ளது. அங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுவது கடினம் என்றே தெரிகிறது.

இந்த சூழலில்தான் டிரம்ப் நிதி உதவி நிறுத்தம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிரம்பின் அறிவிப்பு குறித்து இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற கருத்துக்கணிப்புகளில், மத்திய கிழக்கிற்கு அபரிமிதமாக டிரம்ப் நிதி உதவி அளிப்பதாகவும், இஸ்ரெலுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான கருத்தை மக்கள் கூறியிருந்த நிலையில், டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+