ஸ்டாலினுக்கு இன்று கோவையில் பாராட்டு மழை.. விஜய் திறந்த ரூ.300 கோடி பெரியார் அறிவுலகம்! என்ன பின்னணி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் பெரியார் பெயரில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைத்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் இன்று பாராட்டு விழா நடத்துகிறது.. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக ஸ்டாலின் கோவை வருவதால், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர். இதற்காக கோவையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை அவிநாசி சாலை நீலாம்பூர் பகுதியில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் கோவை மாவட்ட திமுகவுக்கு ஒருங்கிணைந்த புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்காக இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்று கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Stalin Honour Event Vijay Inauguration Rs 300 Crore Project

அடிக்கல் நாட்டு விழா

தற்போது கோவை திமுகவுக்கு மாநகர், தெற்கு, வடக்கு எனத் தனித்தனியாக அலுவலகங்கள் உள்ளன. இவை சிறியதாக இருப்பதால், அனைத்து மாவட்ட அமைப்புகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் பிரம்மாண்டமான அலுவலகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பிலிருந்தபோது இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வந்த நிலையில், தற்போது இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

பெரியார் அறிவுலகம்

கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டது. நூலகம் மற்றும் அறிவியல் மையம் என பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தினார். மேலும், இந்த நூலகத்துக்கு பெரியார் அறிவுலகம் என்ற பெயரையும் அவரே சூட்டினார்.

ஆனால், கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாததால் திமுக ஆட்சிக்காலத்தில் இதைத் திறக்க முடியவில்லை. இதனிடையே, சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிக்கும் வந்தது. இதையடுத்து கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார்.

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டத்தை புதிய அரசு திறந்து வைத்தது அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியது... இப்படிப்பட்ட சூழலில், பெரியார் பெயரில் இத்தகைய பிரம்மாண்டமான அறிவுலகத்தை அமைத்ததற்காக ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் பாராட்டு விழா நடத்துகிறது.

பிரமாண்ட ஏற்பாடுகள்

கோவை வஉசி மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவுக்காக பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவை அவிநாசி சாலையின் இருபுறங்களிலும் திமுக மற்றும் திராவிடர் கழகக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக ஸ்டாலின் கோவை வருவதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில் வரவேற்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ஸ்டாலின், முதலில் நீலாம்பூரில் புதிய திமுக அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிறகு ஓய்வுக்குப் பிறகு மாலை வஉசி மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு 8.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+