"டிக்டாக்" தடையை நீக்கிய டிரம்ப்! "சீன" செயலிக்கு கிரீன் சிக்னல் கொடுத்தது ஏன்? சூட்சுமமே அதுதான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் நேற்றைய தினம் பல்வேறு நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில் முக்கியமானது டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைப்பது. சீன செயலியான டிக்டாக் அமெரிக்கர்களுக்குத் தகவல்களைத் திருடுவதாகச் சொல்லி அந்நாட்டு அரசு அதற்குத் தடை விதித்த நிலையில், இந்த தடையை 75 நாட்கள் நிறுத்தி வைக்கும் வகையிலான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் நேற்று பதவியேற்கிறார். இந்த நிகழ்வில் அமெரிக்காவின் பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சர்வதேச தலைவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

டிரம்ப்:
அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே டிரம்ப் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். சட்டவிரோத குடியேற்றம் தொடங்கிப் பல நிர்வாக உத்தரவுகளை அவர் வரிசையாகப் பிறப்பித்தார். அதில் முக்கியமானது டிக்டாக் தடையை நிறுத்தி வைக்கும் உத்தரவு.. சீனாவைக் கடுமையாக எதிர்க்கும் டிரம்ப், சீன செயலியான டிக்டாக் விவகாரத்தில் மட்டும் இந்த முடிவை ஏன் எடுத்துள்ளார் என்பதற்கான விடையை நாம் பார்க்கலாம். அதற்கு முன்பு, இதன் பின்னணியை நாம் பார்க்கலாம்.
அமெரிக்கர்களின் தகவல்களைச் சீன செயலியான டிக்டாக் திருடுவதாகவும் இதனால் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு டிக்டாக்கிற்கு தடை செய்யும் வகையிலான சட்டம் கடந்தாண்டு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், டிக்டாக் செயலியைத் தடை செய்வது பேச்சுரிமைக்கு எதிரானது என்று அந்த நிறுவனம் சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டின் சூப்ரீம் கோர்ட் தடை செல்லும் என்றே கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
முடங்கிய டிக்டாக்
இதையடுத்து டிக்டாக் செயலி அமெரிக்காவில் முடங்கியது. அமெரிக்காவில் உள்ளவர்களால் டிக்டாக் செயலியை அணுக முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் இதற்கு அமெரிக்கர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் அங்கு டிக்டாக்கை நம்பி பல சமூக வலைத்தள பிரபலங்கள் உள்ளனர். டிக்டாக்கிற்கு தடையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் விமர்சித்தனர். அமெரிக்காவின் மிகப் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக டிக்டாக் இருந்ததால், இதன் பாதிப்பு பெரியளவில் இருக்கும் என்றே சொல்லப்பட்டது.
டிரம்ப் உத்தரவு:
இந்தச் சூழலில் தான் டிக்டாக் செயலிக்கான தடையை நிறுத்தி வைக்கப் போவதாக டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அதாவது டிக்டாக் செயலியில் குறைந்தபட்சம் 50% பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு விற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிக்டாக் தடையை நீக்கப் போவதாக அறிவித்தார். அவர் சொன்னது போலவே முதல் நாள் பிறப்பித்த உத்தரவுகளிலேயே டிக்டாக் தடை நீக்கப்பட்டது. இது தொடர்பான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து டிக்டாக் செயலி மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சூட்சுமமே இதுதான்:
டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவின் அடிப்படையில் டிக்டாக் செயலியின் முடக்கம் 75 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் 50% பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் டிக்டாக் விற்க வேண்டும். அப்படி விற்றுவிட்டால் டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்றே தெரிகிறது. டிரம்பின் இந்த உத்தரவின் மூலம் மூலம் டிக்டாக் ஓனர்ஷிப்பும் சத்தமின்றி அமெரிக்க முதலீட்டாளர்கள் கைகளுக்கு வந்துவிடும். அமெரிக்காவில் உள்ள டிக்டாக் பிரபலங்களுக்கும் எந்தவொரு பிரச்சினையும் வராது.
டிரம்ப் கடந்தாண்டு தான் டிக்டாக் செயலியில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருந்தார். டிக்டாக் செயலியில் டிரம்பிற்கு சுமார் 1.5 கோடி பாலோயர்ஸ்கள் உள்ளனர். இளைய வாக்காளர்களிடம் சென்று சேர டிக்டாக் தனக்கு மிக பெரியளவில் உதவுவதாக டிர்மப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications