ஒரே போடு.. டிரம்ப்பிற்கு சைலண்டாக இந்தியா கொடுத்த அடி.. பதறும் அமெரிக்கா! உற்று பார்க்கும் சீனா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு டிரம்ப் நடவடிக்கைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நடவடிக்கை உலக அரசியலை எப்படி மாற்றி இருக்கிறது.. வளரும் இந்தியா - ரஷ்யா- சீனா உறவு என்பது ஏன் டிரம்ப்பின் தோல்வியாகவே பார்க்கப்படும் என்பது குறித்தெல்லாம் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இம்மாதத் தொடக்கத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். இது முடிந்து சில நாட்களுக்குப் பிறகு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில் இந்தியாவை சீனாவிடம் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். இது டிரம்ப்பின் அடாவடி அரசியலின் விளைவு தானே தவிர வேறு எதுவும் இல்லை.

US President Donald Trump Tariffs Push India Toward Russia China What does it meant for USA

டிரம்ப் நடவடிக்கை

ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது டிரம்ப் விதித்த 50% வரி அமெரிக்கா- இந்தியா வர்த்தகத்தை மாற்றியுள்ளது. டிரம்ப்பின் நிலையற்ற கொள்கை இரு நாட்டு உறவைப் பாதித்தது. இதுவே இந்தியாவை அமெரிக்காவுக்கு எதிராகவும் சீனா- ரஷ்யாவை நோக்கியும் தள்ளியது. இதைத் தவிர்க்கவே அமெரிக்கா பல காலம் முயன்று வந்த நிலையில், டிரம்ப் ஓவர் நைட்டில் அனைத்தையும் நாசம் செய்துவிட்டார்.

இது இப்போது அமெரிக்காவுக்குச் சிக்கலான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஜேக் சல்லிவன் மற்றும் கர்ட் காம்ப்பெல் ஆகியோர் இந்தச் சிக்கலான சூழ்நிலையிலிருந்து வெளியேற ஒரு திட்டத்தை ஏற்கனவே வகுத்துள்ளனர். அவர்கள் 10 ஆண்டு கால ஐந்து அம்சக் கூட்டுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வண்டும் என்கிறார்கள். இந்தியா உடனான பிரச்சனையைச் சரி செய்யவில்லை என்றால் அது அமெரிக்காவுக்கே சிக்கல் என்பது அவர்கள் கருத்து!

கண்டுகொள்ளாத டிரம்ப்

ஆனால், டிரம்ப் இதையெல்லாம் கேட்பதாக இல்லை. இந்திய உறவு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது என்று டிரம்ப் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். மோடியின் சீனா பயணம், அடுத்து நடைபெறும் ரஷ்ய பயணம், ரஷ்ய எண்ணெய்யை வாங்குவது, சீனாவுடன் வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது என ஒவ்வொரு விஷயமும் டிரம்ப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

இந்தியாவுக்குச் சாதகம்

மறுபுறம் அமெரிக்க வரிக்குப் பிறகு இந்தியாவுக்கு நடக்கும் விஷயங்கள் சற்று சாதகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை இந்தியா மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தியா சீனா சிக்கல் தீர்க்கப்பட்டு நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன, எல்லைப் பதற்றங்கள் நிர்வகிக்கப்பட்டன. அதேபோல இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாகவே பேசினார். பயங்கரவாத எதிர்ப்பில் அவரால் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளை ஒருங்கிணைக்க முடிந்தது.

அதேபோல இந்தியா ரஷ்யாவுடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குதல், போக்குவரத்து வழித்தடங்களை மேம்படுத்துதல் மற்றும் பிரிக்ஸ் அமைப்பில் ஈடுபாட்டை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா மற்றவர்களுக்காகக் காத்திருக்காமல், தனக்கான இடத்தை தானே உருவாக்கிக் கொள்கிறது என்பது தெளிவாகத் தெளிவாகிறது.

இந்தியா கொடுத்த பதிலடி

டிரம்ப் வரிக்கு இந்தியா நேரடியாக எந்தவொரு பதிலடியையும் தரவில்லை என்றாலும் மறைமுகமாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் உடனான அமெரிக்க வர்த்தகம் $399 பில்லியனைத் தாண்டி விட்டது. இந்த பிரிக்ஸ் அமைப்பையும் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வந்திருந்தார். ஆனால், அதையும் தாண்டி வர்த்தகத்தை இந்தியா அதிகரித்துள்ளது. மேலும், இந்த அமைப்பின் நியூ டெவலப்மெண்ட் வங்கியில் இருந்து எரிசக்தி மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கான கடனையும் பெறும் நடவடிக்கையை இந்திய ஆரம்பித்துள்ளது.

புரியாமல் இருக்கும் டிரம்ப்

இப்படி இந்தியாவுக்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால், டிரம்ப் டீம் இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் இரண்டே நிலைப்பாடு மட்டுமே இருப்பதாகப் பார்க்கிறது. ஒன்று அமெரிக்காவுக்கு ஆதரவாக அல்லது அமெரிக்காவுக்கு எதிராக என இரண்டை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் இந்தியா என்பது கனடா, மெக்சிகோ போல முழுக்க முழுக்க அமெரிக்க வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் நாடு இல்லை. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட அணுசக்தி கொண்ட நாடு என்பதை டிரம்ப் தரப்பு மறந்துவிடுகிறது.

அமெரிக்காவிற்குள்ளேயே இந்தியாவை இழப்பது அமெரிக்காவுக்கு எந்தளவுக்கு ஆபத்தை என்பதைப் பல்வேறு தரப்பினரும் விளக்கி வருகிறார்கள். உலக நாடுகள் மீதான வரிகளை ஆதரிக்கும் வல்லுநர்கள் கூட, இந்தியா உடனான வரி அவசியம் என்றே சொல்கிறார்கள். இதையெல்லாம் டிரம்ப் தரப்பு புரிந்து கொள்ளுமா.. அதுவரை இது தரப்பு ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்பதே இப்போது பிரதானக் கேள்வியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+