Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் உடலில் இனி குண்டு பாயாது.. அமெரிக்க சீக்ரெட் ஏஜென்சி அதிரடி.. அமலுக்கு வரும் கண்ணாடி கவசம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த மாதம் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் பிரசாரத்தை குறைக்க அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப் மறுத்த நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக அமெரிக்க சீக்ரெட் ஏஜென்சி முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.

Donald Trump US president election 2024 2024

ஆனால் கட்சிக்குள் எழும்பிய எதிர்ப்பை தொடர்ந்து ஜோபைடன் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் VS ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் என மாறி உள்ளது.

இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாாிஸ் ஆகியோர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் கடந்த மாதம் 13ம் தேதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

20 வயது நிரம்பிய தாமஸ் க்ரூக்ஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் டொனால்ட் டிரம்ப் காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் அவரை உடனடியாக பாதுகாவலர்கள் மீட்டு சென்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது டொனால்ட் டிரம்ப் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் டொனால்ட் டிரம்ப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டொனால்ட் டிரம்ப் பொதுவெளியில் பிரசாரம் செய்வதை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறினர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அறிவுரையை வழங்கினர். ஆனால் டொனால்ட் டிரம்ப் கேட்க மறுத்துள்ளார். இது அமெரிக்க அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் டொனால்ட் டிரம்ப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் குழு (Secret Service) முடிவு செய்துள்ளது. சீக்ரெட் சர்வீஸ் குழு என்பது அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய அமைப்பாகும். இந்து அமைப்பு என்பது பணம் சார்ந்த முறைகேடுகளை விசாரிப்பதோடு, அமெரிக்காவில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் அமைப்பாக உள்ளது.

அதன்படி டொனால்ட் டிரம்ப் நிகழ்ச்சியில் குண்டு துளைக்காத கண்ணாடி பயன்படுத்த சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது டொனால்ட் டிரம்ப் பிரசார மேடைகளில் பேசும்போது அவரை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடி வைத்து பாதுகாப்பு கவசம் ஏற்படுத்தப்படும். இதனால் துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பார். அவர் மீது குண்டு பாய்வது தடுக்கப்படும்.

அமெரிக்காவை பொறுத்தவரை பொதுவாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை என்பது அதிபர் வேட்பாளருக்கு வழங்கப்படாது. பொதுவாக இந்த பாதுகாப்பு என்பது அமெரிக்க அதிபர் உள்பட பதவியில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனாலும் தற்போது டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக அமெரிக்க ரகசிய குழு இந்த சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் குண்டு துளைக்காத கண்ணாடி உள்பட பிரத்யேகமாக புதிய தொழில்நுட்பங்களையும் அமெரிக்க அதிபர் வேட்பாளரான குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் நிகழ்ச்சியில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெறும் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் ஆளும் கட்சியான ஜோபைடனின் ஜனநாயக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேவேளையில் டொனால்ட் டிரம்ப் மீது அனுதாப அலையை ஏற்படுத்தியது. இதனால் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சுதாரித்து டொனால்ட் டிரம்ப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு குழுவுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படியே குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு மேற்கூறிய வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+